பிரித்தானிய கடல் பகுதியை கடந்து சென்ற சீன கப்பல்கள்: ராயல் கடற்படை தகவல்
சீன போர் கப்பல் பிரித்தானிய கடல் பகுதி வழியாக கடந்து சென்றதை ராயல் கடற்படை உற்று நோக்குவதாக தெரிவித்துள்ளது.
கடந்து சென்ற சீன போர் கப்பல்
2 சீன போர் கப்பல்கள் பிரித்தானிய கடல் பகுதி வழியாக கடந்து சென்றதை உன்னிப்பாக கவனித்து வந்ததாக ராயல் கடற்படை தெரிவித்துள்ளது.
கடந்த 3 வாரங்களில் 2 முறை சீன போர் கப்பல்கள் பிரித்தானிய கடல் பகுதி வழியாக சென்றதை HMS Richmond மிக நெருக்கமாக கவனித்து வந்தாக தெரிவித்துள்ளது. வெளிநாட்டு போர் கப்பல்களை உன்னிப்பாக கவனிப்பது கடற்படையின் வழக்கமான பாதுகாப்பு நடைமுறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சீன கப்பல்கள் ரஷ்யாவை நோக்கியும், ரஷ்யாவில் இருந்தும் புறப்பட்ட கப்பல்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சீன கப்பல்களை விட ரஷ்ய போர் கப்பல்களை கண்காணிப்பதை பாதுகாப்பு அமைச்சகம் விளம்பரப்படுத்துவது மிகவும் பொதுவானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுத படைகளின் அமைச்சர் Luke Pollard வழங்கிய தகவலில், யூரோ-அட்லாண்டிக் பாதுகாப்பை ஆதரிப்பதற்காக நட்பு நாடுகளும் நெருக்கமாக வேலை செய்வது இந்த அரசின் முதன்மை முன்னுரிமை என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |