1 ரூபாய்க்கு மாதம் முழுவதும் 2GB டேட்டா, இலவச அழைப்புகள்., BSNL-ன் தீபாவளி சலுகை
இந்தியாவின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL, 2025-ஆம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய வாடிக்கையாளர்களுக்காக அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.
“Diwali Bonanza 2025” என பெயரிடப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், புதிய SIM-ஐ பெறும் வாடிக்கையாளர்கள் மாதம் முழுவதும் 2GB தினசரி டேட்டா, 100 SMS மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் இலவச அழைப்புகளை பெறலாம்.
இதற்கான கட்டணம் வெறும் ரூ.1 மட்டுமே.
இந்த சலுகை 2025 அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை செல்லுபடியாகும். புதிய வாடிக்கையாளர்கள் BSNL சேவை மையம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரிடம் சென்று KYC செயல்முறையை முடித்த பின், இந்த 1 ரூபாய் திட்டத்துடன் SIM-ஐ இலவசமாக பெறலாம்.
BSNL, கடந்த சில ஆண்டுகளில் Jio, Airtel, Vi போன்ற தனியார் நிறுவனங்களிடம் தனது சந்தையை இழந்த நிலையில், இந்த சலுகை மூலம் கிராமப்புற மற்றும் நகர் புற பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களை ஈர்க்க முயல்கிறது.
4G சேவையை இலவசமாக ஒரு மாதம் பயன்படுத்தி பார்ப்பதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது.
இதற்கு முன் 2025 ஆகஸ்டில் “Freedom Offer” என்ற 1 ரூபாய் திட்டம் மூலம் BSNL 1.3 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
BSNL Diwali offer 2025, BSNL Re 1 SIM plan, BSNL 2GB per day data plan, BSNL Rs.1 SIM plan, BSNL 1 Rupee SIM plan, BSNL free calls Diwali deal, BSNL new SIM offer 2025, BSNL festive recharge plan, BSNL 4G trial offer India, BSNL Diwali Bonanza plan