2028 வரை இந்தியர்களை Green Card-க்கு தகுதியற்றவர்களாக அறிவித்த அமெரிக்கா- ஏன்?
அமெரிக்காவின் Green Card லொட்டரி திட்டத்தில் இந்தியர்கள் 2028 வரை தகுதியற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த Diversity Visa (DV) லொட்டரி திட்டத்தில் 2028 வரை இந்தியர்கள் பங்கேற்க தகுதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் கடந்த 5 ஆண்டுகளில் குறைந்த அளவில் குடியேற்றம் செய்த நாடுகளுக்கே அமெரிக்க குடியுரிமை வாய்ப்பை வழங்கும் நோக்கில் செயல்படுகிறது.
ஆனால் இந்தியா கடந்த 5 ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையில் குறியேற்றம் செய்ததால், தானாகவே இந்த திட்டத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளது.
2021-ஆம் ஆண்டு 93,450 இந்தியர்கள் அமெரிக்காவிற்கு குடியேறினர். 2022-ல் இந்த எண்ணிக்கை 127,010-ஆக உயர்ந்துள்ளது.
இது தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து குடியேறியவர்களை விட அதிகமாகும்.
2023-ல் கூட 78,070 இந்தியர்கள் குடியேறியுள்ளனர். இதனால், இந்தியா 2028 வரை Green Card லொட்டரிக்கு தகுதியற்ற நாடாகவே இருக்கும்.
இந்தியாவுடன சீனா, தென் கொரியா, கனடா மற்றும் பாகிஸ்தானும் 2026-ஆம் ஆண்டுக்கான லொட்டரியில் இருந்து விலக்கப்பட்டுள்ளன.
இதனால் இந்தியர்களுக்கு நிரந்தர குடிவரவு பெறும் வழிகள் குறைந்து வருகின்றன.
தற்போது, H-1B வேலை விசாவை நிரந்தர குடிவரவாக மாற்றுவது, முதலீட்டு அடிப்படையிலான குடிவரவு, அகதி தஞ்சம், அல்லது குடும்ப ஆதரவு வழியாக புலம்பெயர்வது சாத்தியமாகிறது.
மேலும், ட்ரம்ப் தலைமையிலான நிர்வாத்தின் புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள், மாணவர்கள் விசா விதிமுறைகள் மற்றும் சமூக ஊடக கண்காணிப்பு போன்ற நடவடிக்கைகள் இந்தியர்களின் அமெரிக்கா செல்லும் எண்ணிக்கையை பாதித்துள்ளன. இது இந்தியர்களுக்கு இடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |