BSNL-ன் சூப்பரான ப்ரீபெய்ட் திட்டம்! என்னென்ன புதிய சலுகைகள்
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) என்ற நிறுவனம் வாடிக்கையாளருக்கு குறைந்த விலையில் பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து வருகிறது. அதில், ஏற்கனவே இருக்கும் ஒரு திட்டத்தில் புதிய மாற்றங்களை செய்து திருத்தி அறிவித்துள்ளது.
இந்த திட்டத்திற்கான வேலிடிட்டி காலம் 150 நாள்கள் ஆகும். நீங்கள், பிஎஸ்என்எல் பயனராக இருந்தால் நிச்சயம் இந்த திட்டத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.
குறிப்பாக நீங்கள் இரண்டாம் நிலை சிம்மை பயன்படுத்தி, அது செல்லுபடியாக இருக்க வேண்டும் என்றால் இந்த திட்டம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ரூ.397 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.397 ப்ரீபெய்ட் (Pre Paid) திட்டம் புதிதல்ல. இதில் சில மாற்றங்களை செய்து திருத்தப்பட்டுள்ளது. அதாவது இதற்கான வேலிடிட்டி 180 நாள்கள் இருந்த நிலையில் 150 நாள்களாக மாற்றப்பட்டுள்ளது.
முன்பு, இந்த திட்டத்தை பெறும் வாடிக்கையாளர்கள் 60 நாட்களுக்கு 2ஜிபி டேட்டா (2GB), வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை பெற்றனர். ஆனால், தற்போது 30 நாள்களுக்கு மட்டுமே பெறுவர்.
இந்த திட்டத்தினால் என்ன பயன்?
பிஎஸ்என்எல் வழங்கும் இந்த திட்டமானது நீண்ட கால சேவையை பெறுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 150 நாள்கள்.
முதல் 30 நாட்களில் பலன்கள் முடிவடைந்த பின்னரும், இதனுடைய வேலிடிட்டி இருக்கும். அதாவது, சிம்மை செயலில் வைத்திற்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்து பலனளிக்கும். இதனால், உங்களது அவுட்கோயிங் கால்கள் சேவை நிறுத்தப்படாது.
உங்களுக்கு கொடுக்கப்பட்ட டேட்டாவை முழுமையாக பயன்படுத்தி விட்டாலும் 40 கேபிபிஎஸ் (kbps) வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை 150 நாட்களுக்கு தொடர்ந்து பெறலாம்.
முக்கியமாக, இரண்டாம் நிலை சிம் பயனர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |