Mahindra Thar காரில் பானிபூரி வண்டியை இழுத்து செல்லும் பட்டதாரி இளம் பெண்., ஆனந்த் மஹிந்திரா பாராட்டு
Mahindra Thar காரை வாங்கி, அதில் பானிபூரி வண்டியை இழுத்துச் சென்ற பிடெக் இளம் பெண்ணின் வெற்றிப் பயணத்திற்கு ஆனந்த் மஹிந்திரா பாராட்டு தெரிவித்துள்ளார்.
Btech போன்ற பட்டப்படிப்பைப் பெறுபவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். அவர்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் சேர்ந்து, புதிய தொழில்நுட்ப முயற்சிகளைத் தொடங்கி சாதித்து வருகின்றனர்.
ஆனால் 21 வயதான பிடெக் பட்டதாரி பெண்ணான டாப்ஸி உபாத்யாய் (Tapsi Upadhyay) தள்ளு வண்டியில் பானிபூரி வியாபாரம் செய்து வெற்றி கண்டுள்ளார். அவரது பானிபூரி கடையின் பெயர் BTech Pani Puri Wali.
ஸ்கூட்டியில் தொடங்கிய இவரது தொழில் தற்போது மஹிந்திரா தாரை எட்டியுள்ளது. டாப்ஸி தனது பானிபூரி வண்டியை இழுப்பதற்காக இப்போது புத்தம் புதிய Mahindra Thar கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
இதுகுறித்த காணொளி வைரலானதையடுத்து, Mahindra நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அப்பெண்ணின் சாகச மற்றும் வெற்றி பயணத்தால் ஈர்க்கப்பட்டார். ஒருவரின் வெற்றியில் மஹிந்திரா நிறுவனத்திற்கும் பங்கு இருப்பதாக ஆனந்த் மஹிந்திரா கூறினார்.
ஆனந்த் மஹிந்திரா அப்பெண்ணின் காணொளியைப் பகிர்ந்து, "OffRoad வாகனங்கள் என்ன செய்ய வேண்டும்?
மக்கள் இதுவரை சென்றிராத இடங்களுக்குச் செல்ல உதவவேண்டும்..
சாத்தியமற்றதைக் கண்டறிய மக்களுக்கு உதவவேண்டும்..
மேலும் குறிப்பாக எங்கள் கார்கள் மக்கள் உயரவும் அவர்களின் கனவுகளை நனவாக்கவும் உதவ வேண்டும்..
இந்த வீடியோவை நான் ஏன் விரும்புகிறேன் என்று இப்போது உங்களுக்குத் தெரியும்…." என்று அவர் பதிவிட்டுள்ளார்.
டாப்ஸி உபாத்யாயா டெல்லி திலக்நகரில் தனது பானிபூரி வியாபாரத்தை தள்ளுவண்டி மூலம் தொடங்கியுள்ளார்.
பிடெக் பட்டதாரியான டாப்ஸி பானிபூரி தொழிலை தொடங்கியதற்கு முதல் காரணம், டெல்லியில் சாலையோரங்களில் தள்ளு வண்டியில் பானிபூரி விற்பதை விட, குறிப்பாக பிடெக் பட்டம் பெற்ற பிறகு அதிக சம்பளம் வாங்கும் வேலைகள் உள்ளன.
ஆனால் அதை சவாலாக ஏற்று தனது ஸ்கூட்டியில் தள்ளு வண்டியை கட்டி இழுத்துச்சென்று பானிபூரி விற்க ஆரம்பித்தார் டாப்ஸி.
ஸ்கூட்டிக்குப் பிறகு, Royal Enfield Bullet மூலம் தனது பானிபூரி தள்ளுவண்டியை இழுத்துக்கொண்டிருந்த டாப்ஸி, தற்போது தனது தொழிலை விரிவுபடுத்தி வெற்றி கண்டுள்ளார்.
இதற்குப் பிறகு, புத்தம் புதிய mahindraThar காரை வாங்கி அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறார். இப்போது ஆனந்த மஹிந்திராவின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
BTech Pani Puri Wali, Tapsi Upadhyay, Famous Pani Puri stall, Anand Mahindra, Mahindra Thar, Business women