ரூ.6 கோடி பட்ஜெடில் எடுக்கப்பட்ட படம்.., வசூல் மட்டும் ரூ.250 கோடி - எந்த படத்திற்கு தெரியுமா?
பொதுவாகவே ஒவ்வொரு படமும் ஒவ்வொரு பட்ஜெடில் எடுக்கப்படும். ஒரு படத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்திருந்தால், அந்தப்படம் பெரிய அளவிலான வசூலை பெற்றிருக்காது.
அதுவே சிறிய பட்ஜெடில் செய்யும் படங்கள் பெரிய வசூலை பெற்றிருக்கும்.
அதாவது அது மக்களிடையில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும். குடும்ப படங்களுக்கு எப்போதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும்.
அப்படியான ஒரு படம் தான் 1994 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘ஹம் ஆப் ஹை கோன்’ (Hum Aapke Hain Koun) ஆகும்.
ரூ.6 கோடி பட்ஜெடில் எடுக்கப்பட்ட படம்...
குறித்த திரைப்படத்தில் சல்மான் கான், மாதுரி தீக்ஷித் ஆகியோர் முக்கிய காபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை தான் பாலிவுட்டின் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட் என்று அழைக்கின்றனர்.
இந்த படம் வெளியாகி 31 ஆண்டுகள் கடந்துவிட்டாலும், இன்னும் பல வீடுகளில் இதன் பாடல்கள் ஒளித்துக்கொண்டு தான் இருக்கிறது. குறித்த படத்தின் பாடல்களுக்கு ராம் லக்ஷ்மன் இசையமைத்தார்.
திருமணம்… அதையொட்டி நிகழும் அசம்பாவிதம்.. இடையில் வரும் காதல்.. கடைசியில் சுபம் என முடியும் இந்த திரைக்கதை தொடக்கத்திலிருந்தே பெரும்பாலும் ரசிக்க கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இது வெறும் ரூ.6 கோடியில் உருவாகியதாகவும், உலகளவில் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
3 தசாப்தங்களுக்கு மேல் இந்த படம் கடந்திருந்தாலும், இன்று பார்த்தாலும் சலிப்புத்தட்டாத திரைக்கதையை கொண்டுள்ளது.
இது Amazon Prime, Netflix, ZEE5 ஆகிய ஓடிடி தளங்களில் காணக்கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |