பணி முடித்து வீடு திரும்பிய இளம்பெண்... உடல் உறைந்து சடலமாக மீட்பு: கடைசியாக பதிவு செய்த காணொளி
நியூயார்க்கின் பஃபேலோவில் வரலாறு காணாத பனிப் புயல் நடுவே சிக்கி இளம்பெண் உடல் உறைந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது.
பனிப் புயலில் சிக்கிக்கொண்ட இளம்பெண்
வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் பணி முடித்து வீட்டிற்குச் செல்லும் வழியில் பனிப் புயலில் சிக்கிக்கொண்ட 22 வயதான ஆன்டெல் டெய்லர் 18 மணி நேரத்திற்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தமது வாகனத்தில் காத்திருந்த ஆன்டெல் டெய்லர், புயலில் சிக்கிக்கொண்டதை காணொளியாக பதிவு செய்து தாயாருக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த நிலையில், தமது மகள் தாழ்வெப்பநிலையால் இறக்கவில்லை எனவும் மாறாக கார்பன் மோனாக்சைடு நச்சு வாயு சுவாசித்து இறந்திருக்கலாம் எனவும் அவர் நம்புகிறார்.
நள்ளிரவு கடந்த நிலையில், பதிவு செய்த அந்த காணொளியில், காருக்கு வெளியே பலத்த கார்றுடன் பனிப்புயல் வீசுவது பதிவாகியுள்ளது. அந்த காணொளியை பார்க்க நேர்ந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், அவருக்கு உதவ வேண்டும் என முகம் தெரியாத பலருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Shutterstock
உடல் உறைந்த நிலையில்
ஆனால் சுமார் 18 மணி நேரத்திற்கு பின்னர், சனிக்கிழமை மதியத்திற்கு மேல், உடல் உறைந்த நிலையில் ஆன்டெல் டெய்லர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வட கரோலினா மாகாணத்தின் சார்லோட் பகுதியில் வசித்துவந்த ஆன்டெல் டெய்லர் இந்த ஆண்டு துவக்கத்தில் தான் தமது தந்தையை கவனித்துக் கொள்ளும் பொருட்டு நியூயார்க் நகருக்கு குடிபெயர்ந்தார்.
@reuters
பனிப்புயல் நடுவே சிக்கிக்கொண்ட ஆன்டெல் டெய்லர், பயமாக இருப்பதாகவும் நம்பிக்கை இழந்துவிட்டேன் என கூறியதாகவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். 911 அவசர உதவி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டதன் பின்னர்,
உதவி வரும் வரையில் காத்திருக்கும் இடைவெளியில் ஆன்டெல் டெய்லர் தமது குடும்பத்தினருக்கு அந்த காணொளியை பதிவு செய்து அனுப்பியுள்ளார். ஆனால், உரிய நேரத்தில் அவருக்கு உதவி கிட்டவில்லை எனவும், சுமார் 18 மனி நேரத்திற்கு பின்னர் அவர் சடலமாக மீட்கப்பட்டார் எனவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.