மின்னல் தாக்கி தீப்பற்றி எரிந்து சாம்பலான அடுக்குமாடி கட்டிடம்! கமெராவில் சிக்கிய திகிலூட்டும் காட்சி
ரஷ்யாவில் மின்னல் தாக்கி அடுக்குமாடி கட்டிடம் தீப்பற்றி எரிந்து சாம்பலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Chelyabinsk நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடமே தீக்கிரையாகியுள்ளது.
அடுக்குமாடி கட்டிடம் மீது மின்னல் தாக்கும் காட்சி அந்நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
மின்னல் தாக்கியதில் அடுக்குமாடி கட்டிடத்தின் மேல் தளம் தீப்பற்றி எரிந்துள்ளது.
தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்துள்ளனர்.
An apartment building in #Chelyabinsk caught fire after getting struck by lightning. Thankfully, no one was injured.
— RT (@RT_com) June 24, 2021
Follow us on Telegram https://t.co/a7xmeYo3u6 pic.twitter.com/n4A8lCvw0b
அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனினும், கட்டிடத்தின் மேல் தளம் முழுவதும் எரிந்து சாம்பலாகியுள்ளது.