புல்லட்டில் சென்று டீ விற்றவர் தற்போது லட்சாதிபதி!
அதிக சம்பளம் பெறும் வேலையை உதறிவிட்டு சொந்தமாக டீ விற்று முன்னேறிய ஒருவரான அபிஷேக் பரத்வாஜ் என்பவரை பற்றி பார்க்கலாம்.
அபிஷேக் பரத்வாஜ்
இந்திய மாநிலமாக பீகார், அர்ராவை சேர்ந்த வழக்கறிஞர் திரிலோகி நாத் உபாத்யாய் தம்பதியின் முதல் மகன் அபிஷேக் பரத்வாஜ். இவருக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர். இவர் வீர் குன்வர் சிங் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றுள்ளார்.
இவர் முதலில் Max Life Insurance நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார், பின்னர், கோட்டக் மஹிந்திரா நிறுவனத்தில் 8 ஆண்டுகள் பணிபுரிந்தார். அப்போது, சம்பள உயர்வு கோரி நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்தார். ஆனால், இவரது கோரிக்கையை நிறுவனம் நிராகரித்துவிட்டது.
இதனால் வருத்தமடைந்த அபிஷேக் பரத்வாஜ் மாதத்திற்கு ரூ.75,000 சம்பளம் வாங்கி கொண்டிருந்த வேலையை துணிச்சலுடன் ராஜினாமா செய்தார்.
புல்லட் சாய்வாலா
இதன் பின்னர், தேநீர் விற்கும் தொழிலை தொடங்கலாம் என்று முடிவு செய்தார், அதற்கு, அவர் வைத்திருந்த புல்லட்டையும் தனக்கு பாட்னராக சேர்த்துக் கொண்டார்.
முதல் நாளில் டெல்லி குர்கான் நெடுஞ்சாலையில் 7 கப் டீ விற்று ரூ.75 சம்பாதித்தார். இவர் மாதா ராணியின் பக்தர் என்பதால் முதல் நாள் சம்பளத்தை அவருக்கே காணிக்கையாக செலுத்தினார். பின்பு, தொடர்ந்து 6 மாதங்கள் புல்லட்டில் சென்று டீ விற்றார். இதனால் புல்லட் சாய்வாலா என்று அழைத்தனர்.
நல்ல சம்பளம் தரும் வேலையை விட்டு இந்த தொழில் செய்வதால் அபிஷேக் பரத்வாஜ் தந்தைக்கு இதில் விருப்பமில்லை. அதனால், மகனிடம் அவர் பேசுவதை நிறுத்திவிட்டார்.
தற்போது, ஜனக் சினிமா அருகே டெல்லியின் உத்தம் நகரில் ஒரு தேநீர் கடையை அபிஷேக் பரத்வாஜ் நடத்தி வருகிறார். இதன் மூலம் மாதத்திற்க்கு ரூ.1 லட்சம் வரை சம்பாதித்து வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |