எதுவும் சொல்லாமல் உங்க Bank Account -லிருந்து ரூ.295 எடுக்குறாங்களா? இந்த காரணம் தான்
வங்கி சேமிப்புக் கணக்குகளில் இருந்து ரூ.295 கழிக்கப்படுவது குறித்த தகவல்களை வாடிக்கையாளர்கள் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எஸ்பிஐ வங்கி (SBI)
பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கிக்கணக்கை வைத்துள்ளனர். இந்த எஸ்பிஐ வங்கியானது இந்தியா முழுவதுமாக பல்வேறு கிளைகள் வைத்துள்ளது.
இந்த வங்கியில் ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளதால் பல கடன் திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகின்றனர்.
ரூ.295 எடுப்பதற்கு காரணம்
இந்நிலையில், தங்களுடைய வங்கி சேமிப்புக் கணக்குகளில் இருந்து ரூ.295 கழிக்கப்படுவதாக பல வாடிக்கையாளர்கள் சமூக வலைதளங்களில் புகார் கூறி வருகின்றனர். அதுவும், எந்தவொரு தகவலும் இல்லாமல் ரூ.295 எடுக்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
நீங்கள் உங்களது வங்கிக்கணக்கு மூலமாக மாதத் தவணை முறையில் எந்த பொருளையாவது வாங்கினால், EMI விவரங்களை NACH (National Automated Clearing House) என்ற பகுதி கவனித்துக் கொண்டிருக்கும்.
நீங்கள் EMI செலுத்த வேண்டிய தொகையானது குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு நாள் முன்னரே, உங்களது வங்கிக்கணக்கில் இருக்க வேண்டும். இதனை NACH கவனித்துக் கொண்டிருக்கும்.
அது தவறும் பட்சத்தில் உங்களது வங்கிக்கணக்கில் இருந்து அபராதமாக ரூ.250 எடுக்கப்படும். இதனுடன் வரி சேர்த்து மொத்தமாக ரூ.295 எடுக்கப்படும். இந்த மாதிரி பணம் எடுக்கப்பட்டால் EMI தொகையை சரியாக வங்கிக்கணக்கில் வைத்திருக்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |