உலகக் கோப்பையை வெல்லும் தகுதியுடன் இந்த அணி உள்ளது: மஹேல ஜெயவர்த்தனே
ரவீந்திர ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு இழப்பு தான் எனக் கூறிய மஹேல ஜெயவர்த்தனே
பும்ரா அணிக்கு திரும்பியுள்ளது இந்திய அணிக்கு வலுசேர்த்துள்ளது - மஹேல ஜெயவர்த்தனே
இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வெல்லும் தகுதியுடன் இருப்பதாக இலங்கை ஜாம்பவான் மஹேல ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி ஆசியக் கோப்பை தொடரை ஆறாது முறையாக வென்று சாதனை படைத்தது. இந்திய அணியால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியவில்லை.
இந்திய அணியில் துடுப்பாட்ட வரிசை சிறப்பாக இருந்தாலும் பந்துவீச்சு சொதப்பியது. முகமது ஷமி, பும்ரா, ஹர்ஷல் பட்டேல் இல்லாதது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.
இந்த நிலையில் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் இடம்பெற்றுள்ளனர். இதனால் அந்த அணியின் பந்துவீச்சு வலுப்பெற்றுள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
PC: Lakruwan Wanniarachchi / © Getty Images
இலங்கை ஜாம்பவான் மஹேல ஜெயவர்த்தனே இந்திய அணி குறித்து கூறுகையில், 'விராட் கோலி போன்ற ஒரு வீரர் வெற்றிக்கு காரணமாக இருக்கப் போகிறார் என்ற நம்பிக்கையுடன் இந்திய அணி இருப்பது எதிரணிகளுக்கு கவலையாக இருக்கும். அவரது துடுப்பாட்டம் சிறப்பாக உள்ளது.
ஜஸ்பிரித் பும்ரா ஆசியக் கோப்பையில் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாக இருந்தது. அவர் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருப்பது பெரும் குறையை சரி செய்துள்ளது.
Getty Images
இந்த புத்திசாலித்தனமான வீரர்கள் அனைவரும் உலகக் கோப்பையில் சிறந்த ஃபார்மில் இருக்க வேண்டும், அதுதான் உலகக் கோப்பைக்கும் தகுதியானது. தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் இருவரும் இடம்பெற்றிருப்பதால் ஒருவரை களமிறக்குவது கடினமான ஒன்றாக இருக்கும். அவுஸ்திரேலியாவில் இது ஒரு கண்கவர் உலகக் கோப்பையாக இருக்கும்' என தெரிவித்துள்ளார்.
PC: AFP