பும்ராவுக்கு ஆப்பு வைத்த கவுதம் கம்பீர்! இந்திய அணியின் துணை கேப்டன் யார்?
இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தவிர்க்கப்படுவது குறித்து விவாதங்கள் எழத் தொடங்கியுள்ளது.
துணை கேப்டன் யார்?
இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் BCCI-யின் இந்த அறிவிப்பில் துணை கேப்டன் யார் என்பது குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளிப்படையாக வெளியிடப்படவில்லை.
விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதிலிருந்து துணை கேப்டன் பதவியில் ஜஸ்பிரித் பும்ரா வகித்து வருகிறார்.
இந்நிலையில், அவரை மீண்டும் துணை கேப்டனாக வெளிப்படையாக BCCI அறிவிக்காததை தொடர்ந்து கிரிக்கெட் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பும்ரா இந்தியாவிற்கு நிலையான செயல்திறனை வழங்கி வருகிறார், அவரது அனைத்து திறன்களும் தலைமைப் பண்புகளும் அணியின் விலைமதிப்பற்ற சொத்துக்களாக உள்ளன.
இருப்பினும், சமீபத்திய தேர்வில் தவிர்க்கப்படுவது BCCI-யின் எதிர்கால திட்டங்களில் மாற்றத்தை குறிக்கிறது.
எதிர்கால திட்டங்கள்
BCCI-யின் எதிர்கால தலைமைப் பதவியை வளர்க்கும் நோக்கத்தில் சுப்மன் கில்லை வளர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சுப்மன் கில்-லுக்கு ODI மற்றும் T20ஐ வடிவங்களில் துணை கேப்டன் பதவியை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை எதிர்காலத்திற்கான நடவடிக்கையாக நியாப்படுத்தி இருந்தாலும், பும்ரா போன்ற அனுபவமிக்க வீரரை புறக்கணிப்பதற்கான காரணம் பலரால் கேள்விக்குறியாக உள்ளது.
இந்த முடிவின் பின்னணியில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |