ஆசிய நாடுகளை தாக்கிய சக்திவாய்ந்த புயல்: 21க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
இந்த ஆண்டு ஆசியாவை தாக்கிய மிக சக்திவாய்ந்த புயலாக கருதப்படும் புயல் யாகி(Yagi), வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவின் சில பகுதிகளில் பரவலான பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
புயல் யாகி
வியட்நாம், புயல் யாகியின் தாக்கத்தை மிகவும் பெரிதாக எதிர்கொண்டது, இதில் குறைந்தது 21 பேர் உயிரிழந்ததோடு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
வடக்கு மாகாணமான ஹோவா பினில், கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு ஒரு குடும்பத்தின் நான்கு பேரையும் மண்ணில் புதைத்தது.
🇻🇳#Vietnam #China #typhoonYagi Tifón Yagi vientos sostenidos de más de 200km/h impactando en Vietnam: Super Typhoon Yagi is making landfall in Quang Ninh and Hai Phong. Some damages already occurred. Houses were uproofed while glass and iron sheets flew like papers. Some cars… pic.twitter.com/SCZp8T7VPT
— worldnews24u (@worldnews24u) September 7, 2024
அதைப்போல ஹோவாங் லியன் சன் மலைப்பகுதியிலும் நிலச்சரிவு ஏற்பட்டது, இதில் குழந்தை உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர்.
வியட்நாமின் தலைநகரான ஹனாயில் புயல் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை பாதித்தது மற்றும் பரவலான வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலோர நகரமான ஹாய்ஃபாங்-இல் உள்ள தொழில்துறை பூங்காக்கள் சேதத்தின் காரணமாக மூடப்பட்டுள்ளது, அத்துடன் இது பல பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை பாதித்துள்ளது.
📹🌪 Super Typhoon Yagi Leaves Trail of Destruction in China, Triggers Landslide in Vietnam
— RT_India (@RT_India_news) September 9, 2024
Video shows the aftermath of the storm in Haikou, China, and Typhoon Yagi has killed at least 14 since ripping through Vietnam - with winds so powerful it's capsizing large tourist… pic.twitter.com/eGMqEyLhGP
புயலால் பாதிக்கப்பட்ட முதல் நாடான பிலிப்பைன்ஸில், 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |