இஸ்ரேல் எல்லையில் பகீர் சம்பவம்... பிராந்தியம் முழுக்க வியாபிக்கும் காஸா போர்
மேற்குக் கரைக்கும் ஜோர்டானுக்கும் இடையிலான எல்லைக் கடவையில் மூன்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வன்முறையைத் தூண்டி வருவதை
ஜோர்டான் லொறி சாரதி இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் மீது திடீரென்று துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவமானது சுமார் 11 மாதங்களாக நீடிக்கும் காஸா போரானது அப்பகுதி முழுவதும் வன்முறையைத் தூண்டி வருவதை குறிப்பிடுவதாகவே தெரிவிக்கின்றனர்.
அதே வேளை, வடக்கு காஸாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஒரு மூத்த உதவி அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது ஜோர்டான் ஆற்றின் குறுக்கே உள்ள ஆலன்பி பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. இஸ்ரேல் தரப்பில் நடந்த சம்பவம் குறித்து தெரிவிக்கையில்,
ஜோர்டானில் இருந்து லொறியில் வந்த தீவிரவாதி ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
பூர்வகுடி சமூகத்தை சேர்ந்தவர்
மேலும், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் தொடர்புடைய தீவிரவாதி கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, ஜோர்டான் தரப்பில் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், எல்லைக் கடக்கும் பாதை மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட லொறி சாரதி தெற்கு ஜோர்டானில் உள்ள செல்வாக்குமிக்க ஹுவைதாட் பூர்வகுடி சமூகத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.
1994ல் இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்து மேற்கு கரை எல்லையில் அசம்பாவிதம் பெருமளவு குறைந்துள்ளதாகவே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |