நாங்கள் கடுமையாக போராடினோம்.,அவுஸ்திரேலியாவுக்கு வாழ்த்துக்கள்: இந்திய அணி கேப்டன்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் கடுமையாக போராடியதாக இந்திய அணித்தலைவர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.
இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியா
சிட்னியில் நடந்த கடைசி டெஸ்டில், அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி பார்டர்-கவாஸ்கர் தொடரைக் கைப்பற்றியது.
தோல்வி காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
மேலும், அவுஸ்திரேலிய அணி சூன் மாதம் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
முதல் முறையாக இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா! 10 ஆண்டுகளுக்கு பின்..மகுடம் சூடிய அவுஸ்திரேலிய அணி
பும்ரா
இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய இந்திய அணித்தலைவர் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) கூறுகையில்,
"இந்தத் தொடரில் நாங்கள் கடுமையாக போராடினோம். கடைசி டெஸ்டில் ஒரு பந்துவீச்சாளர் குறைவாக இருந்தபோதும், எங்களது வீரர்கள் சிறப்பாகவே விளையாடினர். இளைஞர்கள் நிறைய அனுபவங்களைப் பெற்றுள்ளனர். அவர்கள் மேலும் வலிமையை பெறுவார்கள்.
எங்கள் குழுவில் நிறைய திறமைகள் இருப்பதை நாங்கள் காட்டியுள்ளோம். தொடரை வெல்லாதது ஏமாற்றமாக இருந்தாலும், சிறப்பான போட்டியை அளித்த அவுஸ்திரேலிய அணிக்கு எனது வாழ்த்துக்கள். இது ஒரு சிறந்த தொடர்" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |