Bun parotta: மதுரை பன் பரோட்டா.., இனி வீட்டிலேயே செய்யலாம்
பரோட்டா என்பது பிரபல ஹொட்டல்களில் மட்டுமல்லாமல், ரோட்டுக்கடைகளிலும் பிரபலமான ஒரு உணவு ஆகும்.
அதுவும் மதுரை என்றால் அசைவு உணவுகளும், இந்த பரோட்டாவும் மிகவும் பிரபலம் என்றே சொல்லலாம்.
அந்தவகையில், சுவையான மதுரை பன் பரோட்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மைதா- 2 கப்
- உப்பு- ½ ஸ்பூன்
- சர்க்கரை- ½ ஸ்பூன்
- பால்- 3 ஸ்பூன்
- தண்ணீர்- ½ கப்
- முட்டை- 1
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, சர்க்கரை, பால், முட்டை சேர்த்து பரோட்டா மாவு போல் நன்கு பிணைந்துகொள்ளவும்.
பின் இதன் மேல் எண்ணெய் ஊற்றி தடவி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
அடுத்து இதை சிறிய சிறிய உருண்டையாக உருட்டி கைகளால் மெலிதாக தேய்க்கவும்.
பின்னை இதனை சுருட்டி கைகளால் சிறிதளவு அழுத்தம் குடுத்து தவாவில் சுட்டு எடுத்தால் சுவையான மதுரை பன் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |