ரூ.500 கோடியில் ஜெகன்மோகன் ரெட்டி கட்டிய பங்களா கண்டுபிடிப்பு.., ஆட்டத்தை ஆரம்பித்த சந்திரபாபு நாயுடு
ஆந்திர மாநிலத்தில் ரூ.500 கோடி மதிப்பில் மிகப்பெரிய பங்களாவை ஜெகன்மோகன் ரெட்டி கட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் தெலுங்கு தேச கட்சி பெரும்பான்மையான வெற்றி பெற்றது.
பின்னர், ஆந்திர மாநில முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், ஜெகன்மோகன் ரெட்டிக்கு வரிசையாக பிரச்சனைகள் வந்து கொண்டு இருக்கின்றன.
ரூ.500 கோடியில் பங்களா
அந்தவகையில், ரூ.500 கோடி மதிப்பில் ஜெகன்மோகன் கட்டிய பங்களா கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள ருஷி கொண்டா என்ற மலைப்பகுதியில் தான் இந்த பங்களா கட்டப்பட்டுள்ளது.
இதனை தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏவான காந்தா ஸ்ரீநிவாஸ் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அதோடு தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த பங்களா தொடர்பான புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.
கண்ணாடிகள், கிரானைட்கள் என கட்டப்பட்ட இந்த பங்களாவில் பாத்ரூம் தொட்டிக்கு மட்டும் ரூ.25 லட்சம் செலவு ஆகியுள்ளதாம். இந்த பங்களா அரசின் பயன்பாட்டிற்கு கட்டப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
அதாவது மீண்டும் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வருவார் என்ற நம்பிக்கையில் இந்த பங்களா கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் இந்த பங்களாவின் கிரகப்பிரவேசம் நடத்தலாம் என ஜெகன்மோகன் ரெட்டி திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |