ஐரோப்பிய ஒன்றிய மாணவர்களுக்கு கூடுதல் கல்விக் கட்டணம்... பிரித்தானிய பிரதமர் உறுதி
Andy Burnham has indicated that EU students will pay higher tuition fees than their British counterparts: பிரித்தானிய மாணவர்களைவிட ஐரோப்பிய ஒன்றிய மாணவர்கள் அதிக கல்விக்கட்டணம் செலுத்த இருப்பதாக பிரதமர் ஆன்டி பர்னாம் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமரான ஆன்டி பர்னாம், கடந்த வாரம், ஐரோப்பிய ஒன்றியத்துடன் உணவுப்பொருட்கள் மற்றும் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, உமிழ்வு வர்த்தகம் மற்றும் இரு தரப்புக்கும் இடையில் இளைஞர்கள் பயணம் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
பின்னணியில் ஒரு பிரச்சினை
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளான 27 நாடுகளின் மாணவ மாணவியர் பிரித்தானியாவில் கல்வி கற்க வரும்போது, பிரித்தானிய மாணவ மாணவியருக்கு பிரித்தானியா எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறதோ, அதே கட்டணத்தைத்தான் ஐரோப்பிய ஒன்றிய மாணவ மாணவியருக்கும் வசூலிக்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய தரப்பு நிபந்தனை வைத்துள்ளதாக, பிபிசி உட்பட பல பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்தன.
நேற்று, கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவரான கெமி பேடனோக் இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

கல்விக் கட்டணம் தொடர்பான பிரச்சினை தீரும் வரை பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாது என ஐரோப்பிய ஒன்றிய தரப்பு கூறியுள்ளதை சுட்டிக் காட்டிய கெமி பேடனோக், ஆக, பிரதமர் கூறுவதுபோல் ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படுமா என கவலை தெரிவித்தார்.
பிரதமரின் பதில்
கெமி பேடனோக் எழுப்பிய விவகாரம் குறித்து பேசிய பிரதமர் ஆன்டி பர்னாம், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளின் மாணவ மாணவியர் பிரித்தானியாவில் கல்வி கற்க வரும்போது, பிரித்தானிய மாணவ மாணவியருக்கு பிரித்தானியா எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறதோ, அதே கட்டணம் வசூலிக்கப்படாது என்றும், ஐரோப்பிய ஒன்றிய மாணவ மாணவியருக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறினார்.

கல்விக் கட்டணம் குறித்த விடயம், தனி ஒப்பந்தம் என்று கூறிய ஆன்டி பர்னாம், அது குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், கெமி பேடனோக், ஐரோப்பிய ஒன்றிய தரப்பின் வாதம் குறித்து பேசுவதாகவும், அது பிரித்தானிய தரப்பின் வாதம் அல்ல என்றும் கூறியுள்ளார்.