லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம்
பிரித்தானியாவின் பிரதமராக லேபர் கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆன்டி பர்னாம், தொடர்ச்சியாக மக்களுக்கு நன்மை தரும் சில நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.
இந்நிலையில், அவர், புலம்பெயர்தல் தொடர்பில் ஒரு நல்ல முடிவை எடுக்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் லட்சக்கணக்கானோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு...
உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத், தொடர்ச்சியாக புலம்பெயர்தலுக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகள் ஏராளமானோருக்கு கவலையை ஏற்படுத்துபவையாக அமைந்துள்ளன.

அவற்றில் ஒன்று, ஏற்கனவே பிரித்தானியாவில் பல ஆண்டுகள் வாழ்ந்து, நிரந்தரமாக குடியமர காத்திருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான விதி ஆகும்.
அதாவது, ஐந்து ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தால், அதன் பின் காலவரையறையின்றி வாழ தகுதி பெறலாம் என இருந்த விதியை மாற்றி, இனி 10 ஆண்டுகளுக்கும்மேல் பிரித்தானியாவில் வாழ்ந்தால் மட்டுமே அது சாத்தியம் என்னும் ரீதியிலான புது விதி ஒன்றை ஷபானா அறிவிக்க, நிரந்தரமாக குடியமர காத்திருக்கும் புலம்பெயர்ந்தோர் ஏராளமானோர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்கள்.
இந்நிலையில், அந்த விதியிலிருந்து முதியவர்களை கவனித்துக்கொள்ளும் பணியை மேற்கொள்ளும் care workers என்னும் பணியாளர்களுக்கு, அதாவது, ஏற்கனவே பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் புலம்பெயர்ந்தோருக்கு, விலக்கு அளிக்க பிரித்தானியாவின் புதிய பிரதமரான ஆன்டி பர்னாம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தி, லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
என்ன காரணம்?
இப்படி தன் அரசில் உள்துறைச் செயலராக இருக்கும் ஷபானாவின் முடிவுக்கு எதிராக பிரதமர் ஆன்டி பர்னாம் முடிவெடுக்க ஒரு முக்கிய காரணம் உள்ளது.

அதை ஆன்டி பர்னாமே கூறியும் உள்ளார். அதாவது, ஆன்டி பர்னாமின் தந்தையான ராய், அல்ஸீமர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தன் மகன் பிரித்தானியாவின் பிரதமரானதுகூட அவருக்கு தெரியாது என்னும் ரீதியில் சில செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், ஷபானாவின் கட்டுப்பாடுகளிலிருந்து care worker பணியாளர்களுக்கு விலக்கு அளிக்கும் திட்டம் குறித்து பேசிய ஆன்டி பர்னாம், என் தந்தைக்கு அல்ஸீமர் பிரச்சினை உள்ளது.
அவரை கவனித்துக்கொள்ள care worker பணியாளர்கள் படும் கஷ்டம் எனக்குத் தெரியும். அது அவர்கள் தவறல்ல, சிஸ்டமே தவறு என்று கூறியிருந்தார் ஆன்டி பர்னாம்.
அத்துடன், சமூக பாதுகாப்பு அமைப்பை இப்படியே விட்டுவிட முடியாது என்றும் கூறியிருந்தார் ஆன்டி பர்னாம்.
ஆக, விரைவில் அது குறித்து ஆன்டி பர்னாம் அறிவிப்பு ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், புலம்பெயர்ந்தோர், சுகாதாரப் பணியாளர்கள் உட்பட ஏராளமானோருக்கு நல்ல செய்தி ஒன்று காத்திருக்கிறது என்று மட்டும் இப்போதைக்குக் கூறலாம்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |