உறவினர் சடலங்களை தெருக்களில் தகனம் செய்யும் மக்கள்... இறுதிச்சடங்குகளுக்கு அனுமதி மறுப்பு
சீனாவில் இறுதிச்சடங்குகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், உறவினர்கள் சடலங்களை மக்கள் தெருக்களில் தகனம் செய்யும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடும்போக்கு நடவடிக்கைகள்
சீனாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கும் பல மடங்கு அதிகரித்துவருவதால், இறப்பு எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதனால் தகன இல்லங்கலில் சடலங்கள் குவிந்து வருகிறது. சடலங்களை எரியூட்டுவதில் தாமதம் ஏற்படுவதால் மக்கள், தங்கள் உறவினர்களை தெருக்களில் எரியூட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
@Douyin/shenyutian68
கொரோனா இல்லாத சமூகம் என்ற சீன நிர்வாகத்தின் கடும்போக்கு நடவடிக்கைகள் அனைத்தும் கடந்த மாதம் திடீரென்று ரத்து செய்யப்பட்டது. எந்த முன் தயாரிப்பும் இல்லாமல் திடீரென்று கட்டுப்பாடுகளை தளர்த்திய நிலையில், பாதிப்பு எண்ணிக்கையானது கட்டுப்பாடின்றி அதிகரித்துள்ளது.
மருத்துவமனைகள் மற்றும் தகன இல்லங்களில் தற்போது சடலங்களால் குவிந்து காணப்படுகிறது. பல உடல்கள் அழுகும் நிலையில் இருப்பதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
அழுகும் நிலையில் உடல்கள்
ஷாங்காய் நகரின் ஹுயினன் பகுதியில் குடும்பம் ஒன்று, கார் பார்க்கிங் பகுதியில் உறவினர் ஒருவரின் சடலத்தை எரியூட்டும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், சீன நிர்வாகம் அது தகனம் அல்ல என மறுத்துள்ளது.
@getty
மட்டுமின்றி, இறந்தவர்களின் உடைகளை தெருக்களில் கொளுத்துவதாகவும், உடல்களை எரியூட்டுவதல்ல எனவும் சீன அதிகாரிகள் தற்போது விளக்கமளித்துள்ளனர்.
கடந்த இரு வாரங்களில் கொரோனா பாதிப்புக்கு 7 பேர்கள் மட்டுமே இறந்துள்ளதாகவும், மொத்த இறப்பு எண்ணிக்கை 5,258 எனவும் சீனா தகவல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.