எரிந்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்! அவர் யார் என தெரியவந்த தகவல்... புகைப்படம்
அமெரிக்காவில் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த பெண் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
St. Petersburg பொலிசார் கடந்த வாரம் நள்ளிரவு 12.42 மணிக்கு எரிந்த நிலையில் பெண்ணொருவரின் சடலத்தை கண்டெடுத்தனர். அப்போது அங்கு தீயணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்ட நிலையில் எரிந்து கொண்டிருந்த தீ அணைக்கப்பட்ட பின்னரே பெண் சடலம் மீட்கப்பட்டது.
உயிரிழந்த பெண் யார் என்பது குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் அவரின் பெயர் Heather Elizabeth Olmstead (31) என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. Heather தொடர்பில் யாருக்கேனும் எதாவது தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.
St. Petersburg Police Department