புடினுடைய அடுத்த யுக்தி... ஏவுகணைத் தாக்குதலில் பற்றியெரியும் எண்ணெய்க்கிடங்குகள்
தங்களை எதிர்த்து அடிக்கும் உக்ரைன் படைகளின் வாகனங்களுக்கு எரிபொருள் இல்லாமல் போகட்டும் என்பதற்காக எரிபொருள் சேமிப்பகங்களை குறிவைக்கத் தொடங்கியுள்ளன ரஷ்ய படைகள்.
நேற்று இரவு, ரஷ்ய ஏவுகணைகள் உக்ரைனிலுள்ள Lutsk, Kharkiv, Zhytomyr, Rivne மற்றும் Kyiv நகரங்களைத் தாக்கின.
நேற்று இரவு 10.30 மணியளவில், 15 நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து இரண்டு ஏவுகணைகள் Lutsk நகரைத் தாக்க, பெரிய எண்ணெய்க் கிடங்கு ஒன்றில் தீப்பற்றியது.
அந்த எண்ணெய்க்கிடங்கில் பயங்கரமாக தீப்பற்றி எரிவதைக் காட்டும் வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள நிலையில், Volyn oblast பகுதி இராணுவ தலைவரான Yuriy Pohulyayko, குடிமக்கள் தாங்கள் அடைக்கலம் புகுந்துள்ள இடங்களுக்குள் பாதுகாப்பாக இருந்துகொள்ளுமாறு எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினரான Lesia Vasylenko, உக்ரைனுடைய எண்ணெய் மற்றும் பெட்ரோல் கையிருப்பை அழிக்கும் புடினுடைய புதிய யுக்தியின் ஒரு பாகம்தான் இந்த ஏவுகணைத் தாக்குதல்கள் என்று கூறியுள்ளார்.
இந்த ஏவுகணைத் தாக்குதல்களில் மக்கள் யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டதா என்பது இதுவரை தெரியவரவில்லை.