சிறுவனை இறக்கும் வரையில் பனியில் புதைத்து சித்திரவதை: தெரிய வந்த காரணம்
அமெரிக்காவில் பைபிள் வசனங்களை ஓத தவறியதால் உறைந்து போகும் வரை பனியில் உயிருடன் புதைத்து உறவினர் சிறுவனை இளைஞர் ஒருவர் கொன்றுள்ளார்.
குறித்த வழக்கில் விஸ்கான்சின் பகுதியை சேர்ந்த 17 வயது இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் புகாரின் அடிப்படையில், 13 பைபில் வசனங்களை மனப்பாடமாக தெரிந்து வைத்திராத Ethan Hauschultz என்ற சிறுவனை கொடூரமாக தண்டிக்க கட்டாயப்படுத்தியுள்ளார் Damian Hauschultz என்பவரின் தந்தை.
சம்பவம் நடந்த 2018ல் 14 வயதேயான Damian Hauschultz ஆத்திரம் அடங்கும் மட்டும் துன்புறுத்தியுள்ளான். ஒருகட்டத்தில், Damian சிறுவன் Ethan-ஐ சுமார் 80 பவுண்ட் அளவுக்கான பனியில் புதைத்துவிட்டு, சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் அங்கேயே விட்டுச்சென்றுள்ளார்.
இந்த நிலையில் சிறுவன் Ethan மரணமடைந்துள்ளதும், சிறுவனின் தலை, மார்பு, வயிறு பகுதியில் பலத்த காயமேற்பட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.
Ethan-ன் தாயாரே, தமது மகன் பனிக்குள் புதையுண்ட நிலையில் பேச்சு மூச்சின்றி கிடப்பதை கண்டுள்ளார். இந்த வழக்கில் விசாரணை முடிவுக்கு வந்துள்ள நிலையில்,
தற்போது 17 வயதாகும் Damian Hauschultz என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 10 ஆண்டுகள் கண்காணிப்பில் வைக்கப்படுவார் என நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.