ஆன்மீக சுற்றுலாவுக்கு சென்றபோது பாரிய விபத்து! இந்தியர்களின் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு
நேபாளத்தில் பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் இந்தியர்கள் 27 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து நேபாள நாட்டிற்கு ஆன்மீக சுற்றுலாப் பேருந்து ஒன்று சென்றது. அதில் 43 பேர் பயணம் செய்தனர்.
குறித்த பேருந்து மார்ஸ்யாங்டி ஆற்றின் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சிகிச்சையில் இருந்தவர்களில் 11 பேர் உயிரிழந்தனர்.
இதனால் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த 16 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பொலிஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |