மேம்பாலத்தில் இருந்து கீழே உருண்டு விழுந்த பேருந்து! சம்பவ இடத்திலே பலர் பலியான சோகம்: துயர சம்பவம்
பாகிஸ்தானில் டயர் வெடித்து பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் ஏழு பேர் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் நேற்று முன்தினம் பேருந்து ஒன்று இரவில் கராச்சிக்கு சென்று கொண்டிருந்துள்ளது. அந்த பேருந்தில் 35க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில் கானேவால் மாவட்டத்தில் உள்ள மேம்பாலத்தில் பேருந்து சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென்று பேருந்து டயர் வெடித்து சிதறியுள்ளது.
இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மேம்பாலத்தில் உள்ள தடுப்பை உடைத்துக் கொண்டு சாலையில் கவிழ்ந்து பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனை அடுத்து படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
குறிப்பாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் எனக் கூறப்படுகிறது.