பிரேசிலில் பயங்கர பேருந்து விபத்து: 38 பயணிகள் உயிரிழப்பு, 13 பேர் படுகாயம்
பிரேசிலில் பேருந்து விபத்தில் 38 பேர் வரை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து விபத்து
தென்கிழக்கு பிரேசிலில் பயங்கரமான பேருந்து விபத்தில் குறைந்தது 38 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மினாஸ் ஜெரைஸ்(Minas Gerais) மாநிலத்தில் நிகழ்ந்த இந்த துயர சம்பவத்தில், பயணிகள் பேருந்து ஒன்று லொறியுடன் மோதி தீப்பிடித்து எரிந்தது.
சாவ் பாலோவிலிருந்து(Sao Paulo) பஹியாவுக்கு(Bahia) பயணித்துக் கொண்டிருந்த பேருந்தில் 45 பயணிகள் இருந்தனர்.
சாலையில் ஏற்பட்ட மோதலில் பயணிகள் பேருந்து தீப்பிடித்து எரிந்தது, விபத்து நடந்த இடத்திலிருந்து கிடைத்த காட்சிகள் எரிந்த பேருந்தின் சிதைவுகளை காட்டுகின்றன.
13 பேர் காயம்
38 பேர் உயிரிழந்த நிலையில் கூடுதலாக, 13 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
லொறி ஓட்டுநர் விபத்துக்குப் பிறகு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார்.
விபத்துக்கான காரணம் இன்னும் முழுமையாக தெரிய வராத நிலையில் சிலர் டயர் வெடித்ததால் பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து லொறியுடன் மோதியதாக தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |