பாகிஸ்தானில் பயங்கரம்! திருமணத்திற்கு சென்ற இடத்தில் நடந்த விபரீதம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி
பாகிஸ்தானில் திருமணத்திற்கு செல்ல காத்திருந்த மக்கள் கூட்டத்திற்குள் எதிர்பாராதவிதமாக பேருந்து புகுந்து பயங்கர விபத்துள்ளானதில் 8 பேர் பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள மண்டி பஹாவுதீன் என்ற நகரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று கொண்டிருந்தது. இதையடுத்து திருமண மண்டபத்துக்கு செல்ல மணமக்களின் வீட்டார்கள் வாடகை வேன் ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தனர்.
மேலும் வேனில் ஏறுவதற்காக உறவுக்காரர்கள் சாலையில் காத்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக அதிவேகத்தில் வந்த பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக சாலையோரம் காத்துக்கொண்டிருந்த மக்கள் மீது வேகமாக மோதியுள்ளது.
இந்த கோர சம்பவத்தில் சிலர் பேருந்தின் சக்கரங்களில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மற்றும் பலர் சாலையில் தூக்கி வீசப்பட்டதால் பலத்த காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுள்ளனர். மேலும் 11 பேர் பலத்த காயமடைந்ததாகவும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுனரை பொலிஸ் தீவிரமாக தேடி வருகின்றனர்.