உயர் மின் அழுத்த கம்பியில் உரசிய பேருந்து; அலட்சியத்தால் நடந்த பரிதாப சம்பவம்
தஞ்சாவூரில் உயர் மின் அழுத்த கம்பியில் உரசிய பேருந்தில் இருந்த 5 பேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் மாவட்டம் தஞ்சாவூரில், கல்லணையிலிருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு கணநாதன் எனும் தனியார் பேருந்து இயக்கப்பட்டுவருகிறது.
அப்பேருந்து இன்று காலை வரகூர் அருகே சென்று கொண்டிருக்கும் போது எதிறில் வந்த லொறிக்கு வழிவிடுவதற்காக ஒதுங்கி சென்றுள்ளது. அங்கே சாலை விரிவாக்கப் பணிக்காக பள்ளம் வெட்டப்பட்டிருந்ததால் ஒரு பக்கமாக சாய்ந்த பேருந்து அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பியின்மேல் சாய்ந்துள்ளது.
இதனால் பேருந்துக்குள் மின்சாரம் பாய்ந்ததில் 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 10-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு மின்சாரம் தாக்கியதில் அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டனர்.
விபத்து நேர்ந்த சில நொடிகளில் தானியங்கி தொழில்நுட்பம் மூலம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மற்ற பயணிகள் உயிர் தப்பினார்.
அப்பகுதியில் மின் காம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வது குறித்து கடந்த 4 சில மாதங்களாகவே மின் வாரியத்துக்கு புகார் அளிக்கப்பட்டு வந்துள்ளதுள்ளதாக கூறப்படுகிறது.
அதிகாரிகளின் அல்டசியத்தால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.