காங்கோவில் ஏரியில் கவிழ்ந்த வணிக படகு: 12 பேர் வரை உயிரிழப்பு
Business Boat Capsizes in Congo 12 dead: காங்கோவில் வர்த்தகர்களை ஏற்றிக் கொண்டு சென்ற படகு கவிழ்ந்ததில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
காங்கோவில் படகு விபத்து
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்கில் அமைந்துள்ள கிவு ஏரியில் வர்த்தகர்களை ஏற்றிக் கொண்டு சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தபட்சம் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை தெற்கு கிவு மாகாணத்தின் இட்ஜ்வீ தீவில் 50 க்கும் மேற்பட்டோரை ஏற்றிக் கொண்டு சென்ற படகு திடீரென கிஷ்கி கிராமம் அருகே கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 12 பேர் வரை உயிரிழந்தனர். 15 பேரை மீட்பு படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

காணாமல் போன நபர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விபத்துக்குள்ளான படகு இட்ஜ்வீ தீவில் உள்ள பிவினாவிலிருந்து போஜாவுக்கு மீன் வர்த்தகர்களையும், பொருட்களையும் ஏற்றிச் சென்றதாக உள்ளூர் அதிகாரி முஹிந்தோ நடம்புகா தெரிவித்துள்ளார்.