பெண் ஊழியர்களுக்கு iPhone Duo பரிசு: ஐக்கிய அரபு அமீரக பெண் தொழிலதிபருக்கு குவியும் பாராட்டு
UAE business leader surprised his female staff with iPhone Duo: ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவர் தங்களுடைய நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு ஐபோனை பரிசளித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
பெண் ஊழியர்களுக்கு iPhone Duo பரிசு
கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஐக்கிய அரபு அமீரக பெண் தொழிலதிபர் ஹசீனா நிஷாத் என்ற தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடலான iPhone Duo-ஐ பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக வெளியான வீடியோவில், நிறுவனத்தின் கூட்டரங்கத்திற்கு வரவழைக்கப்படும் ஊழியர்கள், அங்கு தங்களின் மேசையின் அடியில் வைக்கப்பட்டிருந்த பரிசு பெட்டிகளை கண்டு மகிழ்ச்சியடைகின்றனர்.
மேலும் அந்த பரிசு பெட்டியை திறந்த பார்த்த ஊழியர்கள் அதில் புதிய iPhone Duo இருப்பதை கண்டு அதிர்ச்சியும் எல்லையற்ற வியப்பும் அடைகின்றனர்.
இந்த பரிசானது அங்கு பணிபுரியும் பெண் அலுவலக ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல், அங்கு பானங்கள் வழங்கி தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் பெண் ஊழியருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த எதிர்பாராத பரிசால் நெகிழ்ந்து போன ஊழியர்கள், மேலாண் இயக்குநர் ஹசீனா நிஷாத் கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்தி தங்களது நன்றியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஹசீனா நிஷாத், பெண் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக கருத்துகளையும் பகிர்ந்துள்ளார்.