கழுத்து மற்றும் கை நிறைய 3 கிலோ தங்க நகைகள் அணிந்து திருவண்ணாமலை கோயிலுக்கு வந்த தொழிலதிபர்
தொழிலதிபர் ஒருவர் சுமார் 3 கிலோ தங்க நகைகள் அணிந்து கொண்டு திருவண்ணாமலை கோயிலுக்கு சாமியை தரிசிக்க வந்துள்ளார்.
3 கிலோ நகைகள்
தமிழக மாவட்டமான திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்கின்றனர்.
அந்தவகையில், நேற்று விஜயவாடாவை சேர்ந்த தொழிலதிபர் சாம்பசிவ ராவ் என்பவர் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். இவர் துபாயில் ஹொட்டல் தொழில் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இவர், கோயிலுக்கு வரும் போது கை, கை விரல்கள் மற்றும் கழுத்து நிறைய தங்க நகைகள் அணிந்து வந்துள்ளார்.
அதாவது இவர் அணிந்திருந்த தங்க நகைகளின் எடை சுமார் 3 கிலோ ஆகும். இதனால், இவரை பக்தர்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இது மாதிரியான நிகழ்வுகள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அடிக்கடி நடைபெறும். அங்கு வருகை தரும் பக்தர்கள் சில பேர் கிலோ கணக்கில் நகைகள் அணிந்து வருவதுண்டு.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |