மும்பை தெருக்களில் பால் விற்றவர்.,பல லட்சம் கோடி நிறுவனத்தை உருவாக்கியது எப்படி? Rizwan Sajan சொத்து மதிப்பு
டானூப் குழுமத்தின்(Danube Group) பெயரைக் கேட்டவுடன், துபாயின் உயரமான கட்டடங்கள் மற்றும் மத்திய கிழக்கின் கட்டுமானத் துறையையே மாற்றியமைத்த தொழில் முனைவோர் தலைவர் ரிஸ்வான் சஜனின்(Rizwan Sajan) உருவம் தான் நினைவுக்கு வருகிறது.
கனவுகளை விரிவுபடுத்துதல்
மும்பையின் Ghatkopar பகுதியில் சாதாரண குடும்பத்தில் பிறந்த ரிஸ்வான் சஜனின்(Rizwan Sajan), தன்னுடைய பயணத்தை தெருவோர விற்பனையாளராக தொடங்கினார்.
குடும்ப வறுமை காரணமாக சாலைகளில் பட்டாசு, புத்தகங்கள், பால் ஆகியவற்றை ரிஸ்வான் சஜனின்(Rizwan Sajan) விற்பனை செய்துள்ளார்.
ரிஸ்வான் சஜனின் 16 வயதில் அவரது தந்தை மறைந்த பிறகு, 1981ம் ஆண்டு குவைத்தில் உள்ள மாமாவின் கட்டிட உதிரி பாகங்கள் கடையில் பணிக்கு சேர்ந்து பயிற்சி விற்பனையாளரில் இருந்து மேலாளர் பதிவுக்கு உயர்ந்தார்.
Danube குழுமத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி
மத்திய கிழக்கின் கட்டுமானத் துறையில் சிதறிக் கிடந்த விநியோகஸ்தர்களை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் அனைத்தும் கிடைக்கும் வசதியை வழங்கும் யோசனை ரிஸ்வான் சஜனுக்கு தோன்றியது.
இதன் விளைவாக 1993 இல் டானூப் கட்டுமானப் பொருட்கள் நிறுவனத்தை ரிஸ்வான் சஜனின்(Rizwan Sajan) உருவாக்கினார். இந்த நிறுவனம் தரத்திலும், வாடிக்கையாளர் திருப்தியிலும் கவனம் செலுத்தியதன் மூலம் விரைவிலேயே சந்தையில் நம்பகத்தன்மையை பெற்றது.
1993 இல் துபாயில் ஒரு சிறிய வர்த்தக நிறுவனத்துடன் தொடங்கிய ரிஸ்வான் சஜனின் பயணம், இன்று 4200க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டு UAE, Oman, Bahrain, Saudi Arabia, Qatar, மற்றும் India என பல நாடுகளில் செயல்படும் டானூப் குழுமமாக உருவெடுத்துள்ளது.
கட்டுமானப் பொருட்களின் விற்பனை நிறுவனமாக தொடங்கி வாழ்க்கை முறை சார்ந்த ஒரு பெரிய நிறுவனமாக மாறிய டானூப் குழுமத்தின் இந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கும் சஜனின் தீர்க்கதரிசனம், உறுதிமிக்க முடிவுகள் முக்கிய காரணிகள்.
Rizwan Sajan சொத்து மதிப்பு
Danube குழுமத்தின் கடந்த ஆண்டு வருமானம் மற்றும் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொருளாதார அமைச்சகத்தின் இணையதள தகவல் படி, ரிஸ்வான் சஜனின்(Rizwan Sajan) தற்போதைய சொத்து மதிப்பு பில்லியன் திர்ஹாம்கள்(billions of dirhams) என தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |