சிக்கனை சூடுபடுத்தி சாப்பிட்ட குடும்பம்: பறிபோன 12 வயது சிறுமியின் உயிர்
அரியலூரில் சிக்கனை சூடுபடுத்தி சாப்பிட்ட 12 வயது சிறுமி உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
கோழி இறைச்சியை சூடுபடுத்திய சாப்பிட்ட குடும்பம்
தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் கூழாட்டு குப்பம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ்-அன்பரசி தம்பதி, இவர்களுக்கு இலக்கியா, துவாரகா ஆகிய இரண்டு மகளும், ஒரு மகனும் இருந்தனர்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை கோவிந்தராஜ் குடும்பம் சொந்தமாக வீடு கட்டுவதற்காக பூஜை செய்துள்ளனர். பூஜையை தொடர்ந்து கோழிக்கறி வாங்கி சமைத்து சாப்பிட்ட குடும்பத்தினர்.
அடுத்த நாளும் மீதம் இருந்த சிக்கன் கறியை சூடுப்படுத்தி 3 வேளையும் சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
12 வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்
இதன் பின், 7ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியான இலக்கியா கடுமையான காய்ச்சல் மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி 12 வயது சிறுமியான இலக்கியா உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
அத்துடன் மேல் சிகிச்சைக்காக கோவிந்தராஜ், அன்பரசி, துவாரகா மூவரும் கும்பகோணத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |