ரூ.23,700 கோடி நிறுவனம்.,தொழில் சாம்ராஜ்ஜியத்தை கட்டியாண்ட ஒற்றை இந்தியர்?அவரின் வருமானம்
2,37,000 கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட நெஸ்லே(Nestle) நிறுவனத்தின் சாம்ராஜ்ஜியத்தை கட்டியாளும் இந்தியர் சுரேஷ் நாராயணன் குறித்து பார்ப்போம்.
சுரேஷ் நாராயணன்
உணவு பொருட்கள், குளிர்பானங்கள், சாக்லேட் ஆகிய பல வகையான தின்பண்டங்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் 2,37,000 கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட நெஸ்லே நிறுவனத்தின் வெற்றிக்கு பக்க பலமாய் நிற்கும் அந்த ஒற்றை இந்தியர் தான் சுரேஷ் நாராயணன்.
இவர் டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் கல்வி நிறுவனத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.
அத்துடன் IMD ப்ரோக்ராம் ஃபார் எக்ஸிக்யூடிவ் டெவலப்மெண்ட்டில் டிப்ளமோ படிப்பையும், லண்டன் பிசினஸ் ஸ்கூலில் நடந்த நெஸ்லே லீடர்ஷிப் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தன்னுடைய தொழில் ஆர்வத்தை சுரேஷ் நாராயணன் வளர்த்துக் கொண்டார்.
பல மாற்றங்களை கொண்டு வந்த சுரேஷ் நாராயணன்
1999ம் ஆண்டு இந்தியாவில் உள்ள நெஸ்லே நிறுவனத்தில் எக்ஸிக்யூடிவ் வைஸ் பிரசிடெண்ட்-ஆக சுரேஷ் நாராயணன் பதவியேற்றார்.
அதை தொடர்ந்து நிறுவனத்தில் பல நிர்வாக மாற்றங்களை சுரேஷ் நாராயணன் மேற்கொண்டார், மேலும் குளிர்ந்த டைரி சார்ந்த தொழிலையும் சுரேஷ் நாராயணன் துவக்கி வைத்தார்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அனுபவம் சுரேஷ் நாராயணனுக்கு FMCG துறையில் உள்ளது.
நெஸ்லே நிறுவனத்திற்காக பல நாடுகளில் பணியாற்றியுள்ள சுரேஷ் நாராயணன், இந்தியாவில் மேனேஜிங் டைரக்டராக பதவி ஏற்பதற்கு முன்பு, நெஸ்லே பிலிப்பைன்ஸ் நிறுவனத்தின் CEO ஆக பணிபுரிந்து வந்தார்.
வருமானம்
சுரேஷ் நாராயணனின் 2021ம் ஆண்டின் மொத்த சம்பள பேக்கேஜ் மட்டும் ரூ.18.8 கோடி ஆக இருந்தது.
நெஸ்லே நிறுவனத்தில் பணியாற்றுவதற்கு முன்னதாக, சுரேஷ் நாராயணன் ஹிந்துஸ்தான் யுனிலிவர் , Colgate Palmolive ஆகிய நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |