எந்தவொரு உத்தரவாதமும் இல்லாமல் வீட்டுக்கடன் வாங்கலாம்.., இந்திய அரசின் திட்டம் தெரியுமா?
வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு அரசாங்கம் ஒரு நல்ல செய்தியைக் இந்திய அரசு கொண்டு வந்துள்ளது.
Zero Collateral Home Loan
மக்கள் இனி ரூ.20 லட்சம் வரை எந்த உத்தரவாதமும் இல்லாமல் வீட்டுக் கடனைப் பெற முடியும். இதற்கான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
இப்போது வீட்டுக் கடனுக்கு உத்தரவாதம் மட்டுமல்ல, பல ஆவணங்களும் தேவைப்படாது. இதற்காக, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ளவர்களுக்காக Zoro-Collateral Housing Loan திட்டத்தை கொண்டு வர அரசு தயாராகி வருகிறது.
இதில், மிகக் குறைந்த ஆவணங்களிலோ அல்லது மூன்றாம் நபர் உத்தரவாதம் இல்லாமலோ ரூ.20 லட்சம் வரை கடன் கிடைக்கும்.
ஆதாரங்களின்படி, குறைந்த வருமானம் பெறும் வீட்டுவசதிக்கான கிரெடிட் ரிஸ்க் கியாரண்டி ஃபண்ட் திட்டத்தில் (CRGFTLIH) இத்திட்டத்திற்காக மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
இதற்கான கடன் காலம் 30 ஆண்டுகள் வரை இருக்கலாம். தற்போது ரூ.8 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு மட்டுமே உத்தரவாதக் காப்பீடு கிடைக்கிறது.
அரசாங்க அதிகாரி ஒருவர், "வீடு வாங்குபவர்களுக்கும், ஆவணப்படுத்தப்பட்ட வருமானம் இல்லாதவர்கள் அல்லது தேவையான ஆவணங்கள் குறைவாக உள்ளவர்களுக்கும் கடன் வழங்குவதே எங்கள் நோக்கம்" என்று கூறியுள்ளார்.
சொத்து ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு வீட்டுக்கடன் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பலருக்கும் தங்கள் வீடு அல்லது வேறு ஏதேனும் சொத்துக்களுக்கு கடன் தேவைப்படுகிறது.
ஆனால் அவர்களிடம் சொத்து பற்றிய முழுமையான ஆவணங்கள் இல்லை. அத்தகைய சூழ்நிலையில், முழுமையான சொத்து ஆவணங்கள் இல்லாதவர்களும் சொத்து மீது கடன் பெற முடியும்.
இதற்காக, நிதி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகங்கள், தேசிய வீட்டுவசதி வங்கி மற்றும் பிற வணிக வங்கிகள் இடையே பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
தற்போதைய விதிமுறைகளின்படி, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை உள்ள குடும்பம் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவாக (EWS) கருதப்படுகிறது.
அதே சமயம் ஆண்டு வருமானம் ரூ.3 முதல் 6 லட்சம் வரை உள்ளவர்கள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களாக (LIG) கருதப்படுகிறார்கள்.
ஆண்டு வருமானம் ரூ.6 முதல் 9 லட்சம் வரை உள்ளவர்கள் நடுத்தர வருமானக் குடும்பங்களாகக் கருதப்படுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |