மாத EMI ரூ.2545க்கு TVS Jupiter Scooter வாங்கலாம்! முழு விவரங்கள் உள்ளே
டிவிஎஸ் நிறுவனத்தின் ஜுபிட்டர் ஸ்கூட்டரின் (TVS Jupiter) குறைந்த விலை வேரியன்டான எஸ்எம்டபிள்யூ வேரியண்ட் ஸ்கூட்டரை இஎம்ஐ -ல் வாங்குவதை பற்றி பார்க்கலாம்.
TVS Jupiter SMW
TVS நிறுவனத்தின் Jupiter ஸ்கூட்டர் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்த ஸ்கூட்டரில் குறைந்த விலை வேரியன்டாக எஸ்எம்டபிள்யூ என்ற வேரியண்ட் விற்பனையாகி வருகிறது.
ரூ.10000 முன்பணம் கொடுத்து மாத EMI ரூ.2545 செலுத்தி இந்த ஸ்கூட்டரை நீங்க வாங்க முடியும். டிவிஎஸ் ஜுபிட்டர் எஸ்எம்டபிள்யூ வேரியண்ட் ஸ்கூட்டர் (TVS Jupiter SMW Scooter) எக்ஸ் ஷோரூம் விலையில் ரூ.73,650க்கு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த செலவு போக ஆர்டிஓ செலவு, இன்சூரன்ஸ் செலவு ஆகிய செலவுகள் சேர்த்து ரூ.88,310க்கு விற்பனையாகிறது.
இந்த ஸ்கூட்டரை நீங்கள் வாங்க நினைத்தால் ரூ.10 ஆயிரம் கொடுத்து வாங்கலாம். மீதமுள்ள ரூ.78,310 கடனாக வழங்கப்படும்.
இதற்கு 3 ஆண்டுகள் கடன் பெற்று 10.5 சதவீதம் வட்டி கணக்கீட்டின்படி மாத இஎம்ஐ ரூ.2545 செலுத்த வேண்டும்.
அதன்படி நீங்கள் 3 ஆண்டுகள் EMI செலுத்தினால் வட்டியாக ரூ.13,320 செலுத்துவீர்கள். மொத்தமாக பார்த்தல் இந்த ஸ்கூட்டருக்கு ரூ.1,01,630 செலவு செய்திருப்பீர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |