டொயோட்டாவை பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூரில் முந்தும் சீனாவின் BYD
முதல் முறையாக ஜப்பானின் டொயோட்டாவை பின்னுக்குத் தள்ளி இந்த ஆண்டு இதுவரை சிங்கப்பூரில் மிகவும் பிரபலமான வாகன பிராண்டாக சீனாவின் BYD மாறியுள்ளது.
விற்பனையில் 20 சதவீதம்
வேகமாக வளர்ந்து வரும் மின்சார வாகன தயாரிப்பாளரான BYD வெளிநாட்டு விற்பனையை அதிகரிக்க முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளனர். 2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், BYD 3,002 கார்களை விற்றது, இது சிங்கப்பூரில் மொத்த வாகன விற்பனையில் 20 சதவீதமாகும்.
இதே காலகட்டத்தில் ஜப்பானின் டொயோட்டா 2,050 மின்சார கார்களையும் எலோன் மஸ்கின் டெஸ்லா 535 கார்களையும் விற்பனை செய்துள்ளது. ஆனால் 2024 ஆம் ஆண்டில் 7,876 கார்களை விற்பனை செய்து, ஆசியாவின் பணக்கார நிதி மையமான சிங்கப்பூரில் டொயோட்டா தனது கிரீடத்தை தக்க வைத்திருந்தது.
அதேவேளை BYD மொத்தம் 6,191 கார்களை விற்பனை செய்திருந்தது. சிங்கப்பூரில் BYD-யின் வலுவான விற்பனை வளர்ச்சி, சீனாவில் கடுமையான விலைப் போட்டிக்கு மத்தியில் வெளிநாட்டு சந்தைகளில் கவனம் செலுத்துவதற்கான அதன் முயற்சிகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
மேலும், சீனாவின் நம்பர் 1 வாகன உற்பத்தியாளரான BYD, 2030 ஆம் ஆண்டுக்குள் அதன் வாகனங்களில் பாதியை சீன சந்தைக்கு வெளியே விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
விற்பனை வளர்ச்சி
உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர்களுக்கு போட்டியாக மாறும் ஒரு பெரிய முயற்சி இதுவென்றே கூறுகின்றனர். டெஸ்லாவை விட ஒரு வருடத்திற்கு பிறகு, கடந்த 2022ல் BYD சிங்கப்பூரின் கார் சந்தையில் நுழைந்தது, ஆனால் அதன் பின்னர் மிகவும் வலுவான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.
2023ல்ல் மட்டும் டெஸ்லா 941 கார்களை விற்பனை செய்த நிலையில், 1.416 கார்களை BYD விற்பனை செய்திருந்தது. உலகிலேயே கார் வாங்குவதற்கு மிகவும் விலை உயர்ந்த நகரங்களில் சிங்கப்பூரும் ஒன்று.
BYD-ன் Atto 3 SUV கார் ஒன்றின் விலை என்பது 127,500 அமெரிக்க டொலர் என்றே தெரிய வந்துள்ளது. ஆனால் டொயோட்டாவின் Corolla Altis-ன் விலை 170,888 சிங்கப்பூர் டொலர் என்றே கூறப்படுகிறது.
தென்கிழக்கு ஆசியாவில் BYD ஏற்கனவே தனது தொடக்க வெற்றியைப் பெற்றுள்ளது, ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் விரிவாக்கத் திட்டமிட்டுள்ளதால், தாய்லாந்தை அதன் மிகப்பெரிய வெளிநாட்டு சந்தையாகக் கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |