மின்சார வாகன உலகில் புதிய சாதனை படைத்த BYD YangWang U9 Xtreme
BYD YangWang U9 Xtreme கார் மின்சார வாகன உலகில் புதிய சாதனை படைத்துள்ளது.
BYD நிறுவனத்தின் YangWang U9 Xtreme மின்சார ஹைப்பர் கார், ஜேர்மனியின் புகழ்பெற்ற Nurburgring Nordschleife சுற்றுப்பாதையை (lap) 7 நிமிடங்களுக்குள் முடித்த முதல் மின்சார வாகனம் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது.
20.832 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சுற்றுப்பாதையை 6 நிமிடம் 59.157 வினாடிகளில் முடித்த இந்த கார், Nurburgring-ல் வேகமான மின்சார உற்பத்தி விளையாட்டு வாகனமாகப் பெயர் பெற்றுள்ளது.
இந்த சாதனை, பல மாதங்கள் நீடித்த சோதனைகள், தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் GT ரேசிங் அனுபவம் கொண்ட வீரர் Moritz Kranz-இன் ஒத்துழைப்பால் சாத்தியமானது.
2025-ல், U9 Xtreme மணிக்கு 496.22 கிமீ என்ற உச்ச வேகத்தையும் பதிவு செய்துள்ளது.
YangWang U9 Xtreme-ல் ன்கு மின்மோட்டார்கள் இணைந்து 2,959 bhp சக்தியை உருவாக்குகின்றன.
1,200-volt மின்சாரம் மற்றும் தானாக மாற்றம் செய்யும் சஸ்பென்ஷன் அமைப்புகள், வாகனத்தின் வேகத்தையும் நிலைத்தன்மையையும் உறுதி செய்கின்றன.
Nurburgring ட்ராக்கின் கடுமையான திருப்பங்கள் மற்றும் உயரம் மாற்றங்களை சமாளிக்க இந்த தொழில்நுட்பங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
BYD நிறுவனம், இந்த ஹைப்பர் காரை 30 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
Nurburgring விதிகளின்படி, இது உற்பத்தி வாகனமாக வகைப்படுத்தப்படுவதால், சாதனைக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
BYD U9 Xtreme Nurburgring record, fastest electric hypercar 2025, YangWang U9 EV lap time, Nurburgring EV lap record, BYD electric supercar speed, Moritz Kranz BYD U9 driver, BYD 3000hp electric car, Nurburgring Nordschleife EV, BYD U9 top speed 496 km per hour, electric production car record