இந்தியத் தொழிலதிபர் ஒருவருக்கு ரூ 9,500 கோடி அபராதம் விதித்த அமெரிக்க நீதிமன்றம்
பைஜூ நிறுவனர் பைஜூ ரவீந்திரன் 1.07 பில்லியன் டொலர்களுக்கு மேல் அபராதம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க திவால் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க நிதிப் பிரிவு
பைஜூவின் நிறுவனர் பைஜூ ரவீந்திரன் அமெரிக்க திவால்நிலை நீதிமன்றத்திலிருந்து மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளார். பல முறை நீதிமன்றத்தில் ஆஜராகாததுடன், முக்கிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவுகளையும் புறக்கணித்ததாகாவே பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், அவருக்கு 1.07 பில்லியன் டொலர் (தோராயமாக ரூ 9,591 கோடி) தொகையை திருப்பிச் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் 20 ஆம் திகதி, டெலாவேர் திவால்நிலை நீதிபதி பிரெண்டன் ஷானன், பைஜூஸின் அமெரிக்க நிதிப் பிரிவு Byju’s Alpha நிதியை தவறாகப் பயன்படுத்தியதற்கும் மறைத்ததற்கும் பொறுப்பாக இருப்பதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையில், பைஜு ரவீந்திரன் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து, அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாகத் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்க நீதிமன்றத்தின் தீர்ப்பு விரைவாக வழங்கப்பட்டதாகவும், அதனால் தான் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும் ரவீந்திரன் கூறினார்.

பைஜூ நிறுவனத்திற்காக உலகளாவிய கடன் வழங்குநர்களின் ஒரு குழுமத்திலிருந்து 1.2 பில்லியன் கொலர் காலக்கெடுவுள்ள கடனை திரட்டுவதற்காக Byju’s Alpha-வை உருவாக்கினர். பைஜூஸ் ஆல்பாவிலிருந்து 553 மில்லியன் டொலர் என்ற பெரிய தொகை மாற்றப்பட்டதால் சந்தேகம் எழுந்தது.
நிதி பரிவர்த்தனை
இந்தப் பணம் முதலில் மியாமியை தளமாகக் கொண்ட Camshaft Capital என்ற ஹெட்ஜ் நிதிக்கு மாற்றப்பட்டது. அங்கிருந்து மீண்டும் பைஜூ மற்றும் மற்ற தொடர்புடைய நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டது.
இந்தச் செயல்பாட்டில் பைஜூ ரவீந்திரன் நேரடியாக ஈடுபட்டதை நீதிமன்றம் கண்டறிந்ததால், அவருக்கு எதிராக கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்றம் பைஜூ ரவீந்திரனுக்கு Byju’s Alpha நிதிகளின் முழுமையான கணக்காய்வை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. இதில் Camshaft Capital-க்கு சென்ற 533 மில்லியன் டொலர், அந்த முதலீட்டில் உருவான வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை வட்டி, பிற தொடர்புடைய நிதி பரிவர்த்தனைகளின் விவரங்களும் அடங்கும்.

இருப்பினும், நீதிமன்றம் உத்தரவிட்ட அபராதத்தை பைஜூஸ் உடனடியாக செலுத்தத் தேவையில்லை. ஆனால், இது ரவீந்திரனுக்கு மிகப்பெரிய சட்ட மற்றும் நிதி சுமையாகும்.
இந்த உத்தரவை மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்யாவிட்டால், அவர் அதை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |