பிரான்ஸ் அமைச்சரவை மறுசீரமைப்பு: அரசு செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள புதிய தகவல்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அமைச்சரவை மறுசீரமைப்பு அடுத்த வார தொடக்கத்தில் நடைபெறலாம் என பிரான்ஸ் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஒலிவியா கிரிகோயர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்ளுக்கு முன்பு பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் பெரும்பான்மைக்கு 289 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், ஜனாதிபதி மக்ரோனின் வலதுசாரிக் கட்சி வெறும் 234 இடங்களை மட்டுமே வெற்றிபெற்றது.
மேலும் புதிதாக அமைக்கப்பட்ட இடதுசாரி கட்சி 141 இடங்களை கைப்பற்றியது, இதனால் பிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இம்மானுவேல் மக்ரோன் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை முற்றிலுமாக இழந்தார்.
இந்தநிலையில் பிரான்ஸின் அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட இருக்கும் மறுசீரமைப்பு நிகழ்வுகள் அடுத்த வார தொடக்கத்தில் நடைபெறலாம் என பிரான்ஸ் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஒலிவியா கிரிகோயர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய அமைச்சரவையின் மறுசீரமைப்பு குறித்து நாம் நினைத்து பார்க்கலாம் என La Chaine Info-விற்கு (LCI)தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமைச்சரவையில் நான்கு புதிய அமைச்சர்கள் வரை இடம்பெறலாம் எனவும் தெரிவித்து இருப்பதாக RTL வானொலியின் தகவலின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: முதலைக்கும் நகர மேயருக்கும் இடையே விசித்திர திருமணம்: பிரத்யேக வீடியோ!
இதற்கிடையில், பிரதமர் எலிசபெத் போர்ன் தனது கொள்கை அறிக்கையை ஜூலை 6 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.