முதலைக்கும் நகர மேயருக்கும் இடையே விசித்திர திருமணம்: பிரத்யேக வீடியோ!
மெக்சிகோவின் பாரம்பரிய அறுவடை சம்பிரதாய திருவிழாவை முன்னிட்டு சான் பெட்ரோ நகர மேயர் விக்டர் ஹியூகோ முதலை ஒன்றை திருமணம் செய்துள்ளார்.
மெச்சிகோவில் விவசாய பொருள்களை அறுவடை செய்யும் தினத்தை அறுவடை தினமாக கொண்டாடும் வழக்கத்தை அந்த நாட்டு மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த கொண்டாட்டத்தில் வித்தியாசமான சம்பிரதாயத்தையும் மெக்சிகோ மக்கள் வருடம் வருடம் கடைபிடித்து வருகின்றனர்.
அந்தவகையில், மெக்சிகோவில் அறுவடை மற்றும் மீன்பிடி தொழில் செழிப்பதற்கு சொண்டல் பழங்குடி மக்களால் நடத்தப்பட்ட அறுவடை திருவிழாவில் முதலை ஒன்றை அப்பகுதி நகர மேயர் விக்டர் ஹியூகோ திருமணம் செய்துள்ளார்.
The mayor of Mexican fishing town San Pedro Huamelula symbolically "married" a crocodile on Thursday as part of a local tradition to usher in a bountiful harvest. pic.twitter.com/h1B2oatykz
— CBS News (@CBSNews) July 1, 2022
இசை வாத்தியங்கள் முழங்க வெள்ளை மணமகள் உடையில், அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட முதலையை சான் பெட்ரோ பகுதி மேயர் விக்டர் ஹியூகோ திருமணம் செய்துள்ளார்.
இதனை அந்தப் பழங்குடி மக்கள் 200 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பாரம்பரியத்தை கடைபிடித்து வருகின்றனர்.
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானிய தேர்தல்... மறுப்பு தெரிவித்த பிரதமர் போரிஸ் ஜான்சன்!