பிரித்தானிய தேர்தல்... மறுப்பு தெரிவித்த பிரதமர் போரிஸ் ஜான்சன்!
வழக்கத்திற்கு முன்னதாக பிரித்தானிய தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பை பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் மறுத்துள்ளார்.
பிரித்தானியாவில் கொரோனா காலத்து ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் மீது அவரது சொந்த கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பிகளே அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை தீர்மானத்தை கொண்டுவந்தனர்.
ஆனால் அவற்றில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தனது பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் தக்கவைத்து கொண்டார். இருப்பினும் பிறந்தநாள் கொண்டாங்கள் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளின் தொடர்ச்சியாக அவரது கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆதரவு பெருமளவு சரியத் தொடங்கியது.
இந்தநிலையில், Ipsos நடத்திய கருத்தக்கணிப்பில், வாக்காளர் மத்தியில் கன்சர்வேட்டிவ் கட்சியின் மதிப்பீடு சரிவை காட்டியதால், பிரித்தானியாவில் முன்கூட்டியே தேர்தல் வருவதற்கான சாத்தியகூறுகளை பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் நிராகரித்துள்ளார்.
மேலும் இதுத் தொடர்பாக போரிஸ் ஜான்சன் LBC வானொலியிடம் தெரிவித்த கருத்தில், எனது வேலை என்னவென்றால், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலைப் பற்றி பேசுவது, கொள்கையைப் பற்றி பேசுவது, இங்கிலாந்தைப் பற்றி பேசுவது, வாழ்க்கைச் செலவுப் பிரச்சினைகளை எவ்வாறு சரிசெய்கிறோம் என்பதைப் பற்றி பேசுவது, வாழ்க்கைச் செலவு நெருக்கடி, எல்லாவற்றையும் பற்றி பேசுவது. இங்கிலாந்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நாங்கள் என்ன செய்கிறோம், வலுவான பொருளாதாரத்திற்கான எங்கள் திட்டம் எத்தகையது என்பது பற்றியே எனத் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: ஜேர்மனிக்கு சீனா விடுத்துள்ள எச்சரிக்கை: பின்னணி..
ஈவினிங் ஸ்டாண்டர்ட் பேப்பர் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, தொழிலாளர் கட்சி இரண்டு சதவீத புள்ளிகள் அதிகரித்து 41% ஆதரவும், அதே நேரத்தில் கன்சர்வேடிவ்கள் மூன்று சதவீத புள்ளிகள் குறைந்து 30% ஆதரவும் இருப்பதாக தெரிவித்துள்ளது.