மணிக்கு 60 மைல் வேகத்தில் வீசிய காற்றில் சிக்கிய கேபிள் கார்கள்: அதிர்ச்சியை உருவாக்கியுள்ள காட்சி
இத்தாலியில், கேபிள் கார்களில் பயணித்துக்கொண்டிருந்த சுற்றுலாப்பயணிகள் சிலர், தங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு பயங்கரத்தை சந்திக்க நேர்ந்தது.
மணிக்கு 60 மைல் வேகத்தில் வீசிய காற்றில் சிக்கிய கேபிள் கார்கள்
இத்தாலியிலுள்ள பனிச்சறுக்கு ரிசார்ட் ஒன்றிற்குச் சென்றிருந்த சுற்றுலாப்பயணிகள் சிலர், கேபிள் கார்களில் பயணித்துக்கொண்டிருந்திருந்திருக்கிறார்கள்.
Credit: X/@mrcrabtreepe
அப்போது திடீரென மணிக்கு 60 மைல் வேகத்திற்கு பலத்த காற்று வீசத்துவங்கியுள்ளது. கேபிள் கார்கள் காற்றில் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட, அவற்றிலிருந்த பயணிகள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அலறியுள்ளார்கள்.
ஆனால், அது, கடைசி சுற்று கேபிள் கார்கள் பயணம் என்றும், அதனால் எல்லா கேபிள் கார்களிலும் ஆட்கள் இல்லை என்று கூறப்படுகிறது.
Credit: Instagram/@marco_malcangi
மேலும், இந்த பயங்கர சம்பவத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. என்றாலும், அந்த கேபிள் கார்கள் காற்றில் அலைக்கழிக்கப்படும் காட்சிகளைப் பார்த்தால் திகில் ஏற்படுவதை மறுப்பதற்கில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |