தேனிலவு சென்ற புதுமண தம்பதி…நடுக்கடலில் தவிக்கவிட்ட சுற்றுலா நிறுவனம்: 5 மில்லியன் இழப்பீடு
அமெரிக்காவில் தேனிலவு சென்ற இளம் புதுமண தம்பதிகளை நடுக் கடலில் தவிக்கவிட்ட டூரிஸ்ட் நிறுவனம் மீது 5 மில்லியன் டாலர் தொகை நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தேனிலவு சென்ற இடத்தில் அதிர்ச்சி
அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த அலெக்சாண்டர் பர்க்கில் மற்றும் எலிசபெத் வெப்ஸ்டர் என்ற தம்பதி சுற்றுலா நிறுவனத்தின் உதவியுடன் ஹவாய் தீவுக்கு தேனிலவு சென்றுள்ளனர்,
அங்கு லஹானியாவை சேர்ந்த ஸ்நோர்கெலிங் சுற்றுலா நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்த ஆழ்கடல் ஸ்கூபா டைவிங் செய்வதற்காக இருவரும் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
ஸ்கூபா டைவிங் செய்து கொண்டு இருந்த இருவரும் நீந்தி கடக்க முடியாத ஆபத்தான கடல் பகுதிக்கு செல்லவே, சுற்றுலா குழுவினரை அழைத்துள்ளனர், ஆனால் அவர்கள் தம்பதிகள் இருப்பதையே மறந்து விட்டு கரைக்கு திரும்பியுள்ளனர்.
இதனால் பீதிக்கு உள்ளான தம்பதி நீந்தியே கரையை கடக்க முயற்சித்துள்ளனர், ஒரு கட்டத்தில் இறந்து விடுவோம் என்று அஞ்சிய தம்பதியினர் ஒருவழியாக கரைக்கு திரும்பி சுற்றுலா நிறுவனத்தை தொடர்பு கொண்டு நடந்ததை தெரிவித்துள்ளனர்.
5 மில்லியன் இழப்பீடு
இந்த நிலையில் மீட்கப்பட்ட தம்பதி, தங்களை ஆழ்கடலில் தவிக்க விட்டுச் சென்ற நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்து 5 மில்லியன் அமெரிக்க டாலரை இழப்பீடாக கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால் இது தொடர்பாக விளக்கம் எதுவும் அளிக்காத சுற்றுலா நிறுவனம், தங்களது விதிமுறைகளில் மட்டும் மாற்றங்களை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.