சாதிப் பாகுபாட்டுக்கு தடை... அமெரிக்க மாகாணமொன்றில் மசோதா நிறைவேற்றம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண சட்டமன்றத்தில், சாதி பாகுபாட்டுக்குத் தடை விதிக்கும் மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்கா வரை சென்றுவிட்ட சாதி பாகுபாடு
எவ்வளவு கற்றாலும், எந்த நாட்டுக்குச் சென்றாலும், சில தெற்காசிய நாட்டவர்கள் தங்கள் கூடவே அழைத்துச் செல்லும் ஒரு விடயம் சாதி!
2020ஆம் ஆண்டு, கலிபோர்னியாவிலுள்ள Cisco என்னும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மீது மாகாண அதிகாரிகள் வழக்குத் தொடர்ந்தார்கள். காரணம், அந்த நிறுவனத்தில் பணியாற்றிய உயர் சாதி மேலாளர்கள் இருவர், தலித் பொறியாளர் ஒருவருக்கு பாகுபாடு காட்டி, அவருக்கு குறைவான ஊதியம் வழங்கியது தெரியவந்தது.
2021ஆம் ஆண்டு, Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha (BAPS) என்னும் அமைப்பு நியூ ஜெர்சியில் வழக்கொன்றை சந்திக்க நேர்ந்தது. அந்த அமைப்பு இந்தியாவிலிருந்து தலித் பணியாளர்களை ஆசைகாட்டி வரவழைத்து கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தியதாகவும், அது கட்டாயப் பணிக்கொத்ததாக இருந்தது என்றும் கூறி அந்த அமைப்பின் மீது வழக்குத் தொடரப்பட்டது.
தெற்காசிய நாடுகளிலிருந்து வருவோரை பாதுகாக்கும் மசோதா
இப்படி அமெரிக்காவிலேயே பல விடயங்கள் நிகழ்ந்துள்ளன, இவை சில உதாரணங்கள் மட்டுமே. ஆக, இப்படி தெற்காசிய நாடுகளிலிருந்து வருவோருக்கு எதிராக பாகுபாடுகள் காட்டப்படும் நிலையில், அவர்களை பாதுகாக்கும் வகையில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை சட்டமாக்குவது குறித்து ஆளுநர் முடிவு செய்யவேண்டும். ஏற்கனவே சாதி பாகுபட்டுக்குத் தடை விதித்துள்ள முதல் அமெரிக்க நகரமாக Seattle ஆகியுள்ள நிலையில், தற்போது சாதி பாகுபாட்டுக்குத் தடை விதிக்கும் மசோதாவை ஏற்றுக்கொண்ட முதல் மாகாணமாக கலிபோர்னியா ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |