ஒரே நாளில் மூன்று முறை கைது செய்யப்பட்ட நபர்: நடந்தது என்ன?
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் ஒரேநாளில் ஜேம்ஸ் லாங்டன் என்பவர் மூன்று முறை கைது ஆகிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் glendale என்ற பகுதியில் அதிகாலை 3மணிக்கு சிவப்பு விளக்குகளை மதிக்காமல் ஜேம்ஸ் லாங்டன்(47) சுற்றி திரிந்துள்ளார்.
இதனை பற்றி விசாரித்த பொலிஸாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அன்று முதல் முறையாக கைது செய்யப்பட்டுளார்.
இந்த கைது நடவடிக்கைக்கு பிறகு ஜேம்ஸ் மருத்துவ உதவியை கேட்கவே அவரை மருத்துவமணையில் அனுமதித்துவிட்டு, நீதிமன்றத்தில் வந்து சரணடையுமாறு தெரிவித்து அவரை விடுவித்துள்ளனர்.
இதன் பின் சிறிதுநேரத்துக்கு பிறகு மீண்டும் glendale வர்த்தவளாகத்துக்கு அத்துமீறி நுழைந்ததற்காக அவரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
பின் மூன்று மணி நேரம் கழித்து மாவட்டத்தின் அவசரகால "பூஜ்ஜிய டாலர்" ஜாமீன் உத்தரவு காரணமாக விடுவிக்கப்பட்டுள்ளார்.
பிறகு ஜேம்ஸ் லாங்டன் (47) ஆளில்லா அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடமாடுவதை பார்த்த அதிகாரி ஒருவர் அவரை வெளியேறுமாறு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அது தோல்வியில் முடியவே அவரை மீண்டும் இரவு 7 மணிக்கு போலீசார் கைது செய்துள்ளார்.
மேலும் சம்ஸ் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 6000 டாலர்கள் வரி சேதம் ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஒரே நாளில் மூன்று முறை கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்கு 1,50,000 என்ற பிணைத்தொகையுடன் சிறையில் அடிக்கப்பட்டுள்ளார்.
ஜேம்ஸ் லாங்டன் என்ற நபர் ஒரே நாளில் மூன்று முறை கைது செய்யப்பட்ட தகவலை அறிந்து அப்பகுதி மக்கள் வியப்படைந்துள்ளனர்.