கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட மர்ம பீப்பாய்கள்: வெளிவந்த உறைய வைக்கும் உண்மை
கலிபோர்னியா கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம பீப்பாய்கள் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
கடலில் கொட்டப்பட்ட மர்ம பீப்பாய்கள்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சான் பெட்ரோ பேசின் ஆழ்கடல் பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு ஆயிரக்கணக்கில் மர்மமான பீப்பாய்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவை 1972ம் ஆண்டு தடை செய்யப்பட்ட டிடிடி (DDT) என்ற நச்சுப் பூச்சிக்கொல்லி மருந்துகளை கொண்டிருக்கலாம் என பலராலும் அஞ்சப்பட்டது.
மேலும் இந்த மர்ம பூப்பாய்களை சுற்றி வெள்ளை நிற வளையங்கள் அல்லது ஒளிவட்டங்கள் போன்ற காணப்பட்ட நிலையில், இவை 1930 முதல் 1970-களுக்கு இடைப்பட்ட காலத்தில் கடலில் கொட்டப்பட்டு இருக்கலாம் எனவும் ஊகிக்கப்பட்டது.
வெளிவந்த மர்மம்
இந்நிலையில் கலிபோர்னியா சான் டியாகோ பல்கலைக்கழகத்தின் ஸ்கிரிப்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓசியனோகிராபியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜோஹன்னா குட்லெபனின் தலைமையிலான குழு வெள்ளை ஒளிவட்ட மர்ம பீப்பாய்கள் குறித்த ரகசியத்தை உடைத்துள்ளனர்.
அதில், இந்த மர்ம பீப்பாய்களில் டிடிடி (DDT) என்ற நச்சுப் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு பதிலாக அதைவிட பயங்கரமான ”பிஹெச் 12” என்ற அளவிலான எரிச்சலூட்டும் காரத்தன்மை கொண்ட கழிவு பொருட்களை இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
Researchers found 1000s of barrels filled with chemicals off the coast of Los Angeles.
— BigDAWG Harris (@HarrisRobertL17) September 10, 2025
New information about the situation was released.... pic.twitter.com/yT7O2cnYhZ
ஆனால் இந்த இந்த பயங்கரமான காரத்தன்மை கொண்ட கழிவுப் பொருளை எதற்காக இந்த பீப்பாய்களில் அடைத்து பயன்படுத்தினார்கள் என்பது குறித்த கேள்வி புதிதாக எழுந்துள்ளது.
வெள்ளை ஒளி வட்டங்கள் பின்னணி? பீப்பாய்களில் இருக்கும் காரக் கழிவுகள் கசிந்து கடல் நீரில் உள்ள மெக்னீசியத்துடன் வினைபுரிந்து ப்ரூசைட் என்ற கனிமத்தை உருவாக்குகின்றன.
இவை கடல் தரையில் படிந்து சிமெண்ட் மேலோட்டை போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன, மேலும் இந்த செயல்முறை மீண்டும் மீண்டும் நிகழ்ந்து அவை கால்சியம் கார்பனேட்டை உருவாக்குகின்றன. அவையே இந்த வெள்ளை ஒளி வளையங்களுக்கான காரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |