கலிபோர்னியாவில் தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்: இருவர் பலி, 2 பேர் கவலைக்கிடம்
California small plane crash Two Dead: கலிபோர்னியாவில் நடந்த சிறிய ரக விமான விபத்தில் 2 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
கலிபோர்னியாவில் விமான விபத்து
சனிக்கிழமை பிற்பகலில் கலிபோர்னியாவின் நார்த்வெஸ்ட் ப்ரெஸ்னோ(Northwest Fresno) பகுதியில் நடந்த சிறிய ரக விமான விபத்தில் இரண்டு பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
CALIFORNIA | Plane crash reported in Northeast Fresno https://t.co/9fRf0CZIEo pic.twitter.com/N2vMOER4eK
— Breaking X (@BreakingXAlerts) September 5, 2026
பிளைத் அவென்யூவில் உள்ள சியாரா ஸ்கை பார்க் விமான நிலையத்திற்கு அருகே இந்த சிறிய ரக விமான விபத்தானது ஏற்பட்டுள்ளது.
விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், உள்ளூர் மற்றும் மத்திய விமான துறை அதிகாரிகள் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.
விமான விபத்தை தொடர்ந்து அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிறிது நேரம் மின் தடை ஏற்பட்டது. ஆனால் விரைவாக செயல்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மின் தடையை உடனடியாக சரி செய்தனர்.

இந்நிலையில், இந்த விமான விபத்தானது எதிர்பாராத மற்றும் பேரதிர்ச்சியான துயரம் என்று ப்ரெஸ்னோ நகர மன்ற உறுப்பினர் மைக் கார்பாசி குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |