தெற்கு கலிபோர்னியாவில் விமான விபத்து: 2 பேர் உயிரிழப்பு 18 பேர் காயம்!
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் சிறிய விமானம் விழுந்த விபத்தில் 2 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
விமான விபத்து
வியாழக்கிழமை தெற்கு கலிபோர்னியாவில் நிகழ்ந்த பயங்கர விமான விபத்தில் 2 பேர் உயிரிழந்ததோடு 18 பேர் காயமடைந்தனர்.
200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த பெரிய தளபாட உற்பத்தி(furniture manufacturing facility) நிறுவனத்தின் கூரையின் மேல் சிறிய விமானம் கீழே விழுந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
ভয়াবহ দুর্ঘটনা ক্যালিফর্নিয়ায় #PlaneCrash #California #Plane
— Anandabazar Patrika (@MyAnandaBazar) January 3, 2025
[Plane Crash, pic.twitter.com/mPqUS6qs2g
புல்லர்டன் நகர விமான நிலையத்திலிருந்து சிறிது நேரத்திற்கு முன்பு புறப்பட்ட விமானம், புறப்பட்ட இரண்டு நிமிடங்களுக்குள்ளாகவே விபத்துக்குள்ளானது.
உயிரிழந்தவர்கள் விமானத்தில் பயணம் செய்தவர்களா அல்லது கட்டிடத்திற்குள் இருந்தவர்களா என்பது தெரியவில்லை.
அருகிலுள்ள ஒரு வணிக நிறுவனத்தின் பாதுகாப்பு கேமராவில் விமானம் ஒரு கோணத்தில் தாழ்ந்து வந்து கட்டிடத்தில் மோதுவதையும், அதனால் தீ விபத்து ஏற்பட்டு கருப்பு புகை மூட்டம் எழுந்ததையும் பதிவு செய்துள்ளது.
அவசரகால பணியாளர்கள் விரைவாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து, சுற்றியுள்ள வணிக நிறுவனங்களை வெளியேற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |