நாயை வாக்களிக்க செய்து வாக்குச்சீட்டை பதிவிட்ட பெண்: எதிர்கொள்ளும் 5 குற்றச்சாட்டுகள்
அமெரிக்காவில் பெண்ணொருவர் நாயை வாக்களிக்க செய்து வாக்குச்சீட்டை பேஸ்புக்கில் பதிவிட்டதால் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
மாயா ஜீன் என்ற நாய்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த 62 வயது பெண் லாரா லீ யூரெக்ஸ்.
இவர் தனது மாயா ஜீன் என்ற நாய், 2021ஆம் ஆண்டு ஆளுநர் தேர்தல் மற்றும் 2022ஆம் ஆண்டு முதன்மைத் தேர்தல்களில் வாக்களிக்கப் பதிவு செய்ததாக, ஆரஞ்சு மாவட்ட வாக்காளர் அலுவலகத்தில் தானாக அறிக்கை அளித்தார்.
மேலும், 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பேஸ்புக்கில் 'நான் வாக்களித்தேன்' என்ற ஸ்டிக்கரை அவரது நாய் அணிந்து வாக்குச்சீட்டுடன் போஸ் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து 2024யில் மற்றொரு பதிவில், 'மாயா இன்னும் தனது வாக்குச்சீட்டைப் பெறுகிறார்' என்ற தலைப்புடன் வெளியிட்டார்.
ஐந்து குற்றச்சாட்டுகள்
ஆனால், குறித்த நாய் இறந்தபின் இது பதிவிடப்பட்டது என ஆரஞ்சு கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் தெரிவித்தார்.
அதே சமயம் நாய் எவ்வாறு பதிவு செய்யப்பட்டு வாக்களிக்க முடிந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்த நிலையில் தனது நாயின் பெயரில் வாக்குச்சீட்டுகளை பதிவிட்டதால் லாரா மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அதில் ஒரு பொய் சாட்சியம் அளித்தல், ஒரு பொய்யான அல்லது போலி ஆவணத்தை வாங்குதல் அல்லது தாக்கல் செய்தல், இரண்டு முறை வாக்களிக்க மற்றும் ஒரு முறை இல்லாத நபரை வாக்களிக்கப் பதிவு செய்தல் ஆகியவை அடங்கும்.
செப்டம்பர் 9ஆம் திகதி வெஸ்ட்மின்ஸ்டரில் லாரா விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளார்.
மேலும், அனைத்து வழக்குகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் மாநில சிறைத்தண்டனையை எதிர்கொள்வார் என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |